கோபியிடம் சண்டை போடும் ராதிகா.. குடும்பத்தின் அருமையை புரிந்து கொள்ளும் கோபி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
கோபியிடம் சண்டை போடும் ராதிகா.. குடும்பத்தின் அருமையை புரிந்து கொள்ளும் கோபி - இன்றைய
கோபியிடம் சண்டை போடும் ராதிகா.. குடும்பத்தின் அருமையை புரிந்து கொள்ளும் கோபி - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
கோபியிடம் சண்டை போடும் ராதிகா.. குடும்பத்தின் அருமையை புரிந்து கொள்ளும் கோபி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமம் சீரியலில் பாக்கியா அவார்ட் நிகழ்ச்சிக்கு போனது பற்றி ராமமூர்த்தி பெருமையாக எல்லாரிடமும் சொல்கிறார். மறுபக்கம் ராதிகா அவார்ட் நிகழ்ச்சியில் நடந்ததை நினைத்து கோபியிடம் சண்டை போடுகிறார். அதனால் கோபி பொறுமையை இழக்கிறார்.

மகா சங்கமம்

இன்று “மகா சங்கமம்” சீரியலில், பாக்கியா அவார்ட் நிகழ்ச்சியில் பேசியதை பற்றி ராமமூர்த்தி பெருமையாக பேசுகிறார். எழில் நீ ஏன் அங்கே போனாய் என கேட்க, பாக்கியா மோகன் அங்கிள் கூப்பிட்டால் போக தான் வேண்டும் என சொல்கிறார். பின் ராமமூர்த்தி 25 வருசமாக இவள் குடும்பத்தை பார்த்துக் கொண்டதால் தான் அவார்ட் வாங்க முடிந்தது என சொல்ல, பாக்கியா பேசியதை கேட்டு அந்த கோபிக்கும் புது பொண்டாட்டிக்கும் முகமே சரி இல்லை என சொல்கிறார். மறுபக்கம் மீனா ஜீவா வருவார் என ஆவலுடன் காத்திருக்க அப்போது மீனாவின் அம்மா வருகிறார். இந்த நேரத்தில் ஏன் இப்படி கிளம்பி இருக்கிறாய் என கேட்க, சும்மா தான் என மீனா சொல்கிறார். பின் உனக்கு துணைக்கு இருக்கலாம் என வந்தேன் என மீனாவின் அம்மா வருகிறார்.

மறுபக்கம் ராதிகா கோவமாக இருக்க, கோபி நான் என்ன செய்தேன் என கேட்கிறார். என்னை அவமானப்படுத்த தான் இங்கே கூட்டிக் கொண்டு வந்தீங்களா என கேட்கிறார். என் வீட்டில் இருப்பவர்கள் அப்படி செய்தால் நான் என்ன செய்வேன் என கோபி கேட்க, நேற்றே நான் கிளம்பி இருப்பேன் ஆனால் நீங்க தான் அவார்ட் நிகழ்ச்சியில் என்னை வர சொன்னீங்க என கேட்கிறார். பின் ராதிகா பயங்கரமாக கோவப்பட்டு பேச, கோபி பொறுமையை இழக்கிறார். வெளியே வந்து ராதிகாவை சத்தம் போட ராதிகாவும் வாக்குவாதம் செய்கிறார். அதை எல்லாம் எழில் மூர்த்தி பார்த்து ஒன்றும் பேசாமல் கிளம்புகிறார்.

பின் பாக்கியா குடும்பத்துடன் பாடலுக்கு நடனம் ஆடி சந்தோசமாக இருக்கிறார். எழில், கண்ணன் இனியா ஈஸ்வரி, ஐஸ்வர்யா என அனைவரும் சந்தோசமாக இருக்க கோபி அதை எல்லாம் ஏக்கத்துடன் பார்க்கிறார். அப்போது ராமமூர்த்தி கோபியிடம் பேசுகிறார். சந்தோசமான குடும்பத்தை நரகம் என நினைத்து சொர்க்கத்தை கல்யாணம் செய்தாய் இப்போது தெரிகிறதா எது சந்தோசம் என, நாங்க நல்லவங்க சந்தோசமாக தான் இருப்போம், நீ தான் கெட்டவன் என பேச அப்படி எல்லாம் நான் நினைக்கவே இல்லை என கோபி சொல்கிறார். ஆனால் குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக இருப்பதை பார்த்து கோபி வருத்தப்படுகிறார்.

முடிவிற்கு வரும் பிரபல சீரியல்.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

கொடைக்கானலில் சிறந்த ஜோடிக்கான போட்டி நடைபெறுகிறது. அதில் அனைவரும் கலந்து கொள்கின்றனர். அதில் பாட்டி தாத்தா எழுதியதை பார்க்கின்றனர். ஆனால் கண்ணனும் ஐஸ்வர்யாவும் தவறாக எழுதி இருக்கின்றனர். பின் கண்ணன் கோபி ராதிகாவை கலந்து கொள்ள சொல்கிறார். மேலும் தனம் மூர்த்தியும் கலந்து கொள்கின்றனர். கோபி ராதிகாவுக்கு கேள்விகள் கொடுக்கப்படுகிறது. அதில் தனம் மூர்த்தி முழு மதிப்பெண் பெறுகின்றனர். ஆனால் ராதிகா வெறும் 5 மார்க் தான் வாங்குகிறார். அதனால் கண்ணன் அவர்களை கிண்டல் செய்கிறார். ராமமூர்த்தி அதை பார்த்து சிரிக்கின்றனர். ஆனால் கோபி கோவமாக பேச, வேண்டும் என்றே என்னை வம்பு செய்வதாக கோபி சொல்கிறார். பின் கண்ணன் பதில்களை படித்து விளக்கம் கொடுக்கிறார். பின் ராதிகாவும் கோபியும் கிளம்பி செல்கின்றனர். மூர்த்தியும் எல்லாரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!