ராதிகா உடன் போன் பேச முடியாமல் தவிக்கும் கோபி, இன்னும் சிலரை அழைக்க திட்டமிடும் பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
ராதிகா உடன் போன் பேச முடியாமல் தவிக்கும் கோபி, இன்னும் சிலரை அழைக்க திட்டமிடும் பாக்கியா - இன்றைய
ராதிகா உடன் போன் பேச முடியாமல் தவிக்கும் கோபி, இன்னும் சிலரை அழைக்க திட்டமிடும் பாக்கியா - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
ராதிகா உடன் போன் பேச முடியாமல் தவிக்கும் கோபி, இன்னும் சிலரை அழைக்க திட்டமிடும் பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியலில், வீட்டிற்கு விருந்தாளிகள் வந்திருப்பதால் கோபிக்கு தனியாக இருக்க இடம் இல்லாமல் இருக்கிறார். பின் பாக்கியா சிலரை கூப்பிட வேண்டும் என சொல்ல தனம் அவர்களுடன் இணைந்து கொள்கிறார்.

மகா சங்கமம்:

இன்று மகா சங்கமம் சீரியலில், கோபி இரவு தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அப்போது ராதிகா போன் செய்ய கோபி போன் பேச வெளியே வருகிறார். அப்போது ராதிகா ஏன் சரியாக பேசாமல் இருக்கீங்க என கேட்க அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு மாடிக்கு போன் பேச கோபி வருகிறார். அப்போது மாடியில் ஜீவா எழில் கதிர் படுத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோபி மாடிக்கு வர ஜீவா படுத்திருப்பது தெரியாமல் மிதித்துவிடுகிறார். பின் கோபி போனை கட் செய்துவிட்டு அவர்களிடம் காத்து வாங்க வந்ததாக சொல்கிறார். அப்போது ராதிகா போன் செய்து கொண்டிருக்க ஆனால் கோபி போனை கட் செய்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் கோபியை அவர்கள் அமர வைக்கின்றனர். கோபி பதட்டமாக இருக்க ஏன் இப்படி பதட்டமாக இருக்கீங்க என ஜீவா கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என கோபி சொல்லி சமாளிக்கிறார். பின் பாக்கியா தனம் முல்லை எல்லாரும் ஹாலில் படுத்திருக்கின்றனர். அப்போது முல்லை வீட்டில் இருந்தால் குழந்தை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பேன் நல்ல வேளை நான் இங்கே வந்தேன் என சொல்கிறார். பின் செல்வி எனக்கு 3 குழந்தைகள் ஆனால் நான் பாக்கியா வீட்டில் தான இருக்கேன் எல்லாருக்கும் ஒரு கஷ்டம் என சொல்கிறார். பின் மீனா அங்கே வர இனியா ஐஸ்வர்யா தூங்க விடாமல் இருப்பதாக சொல்கிறார்.

மறுநாள் கோபி எழுந்திருக்க அவருக்கு அவசரமாக பாத்ரூம் வருகிறது. அப்போது மூர்த்தி பாத்ரூமில் இருக்க கோபியால் அவசரத்தை அடக்க முடியவில்லை. அவர் என்ன செய்வது என தெரியாமல் கோவத்தில் வெளியே இருக்கிறார். அப்போது மூர்த்தி குளித்துவிட்டு வருகிறார். பின் கோபியின் அவசரம் தெரியாமல் இரவெல்லாம் நன்றாக தூங்குனீங்களா என பேசுகிறார். பின் கோபி உள்ளே போக அப்போது வந்த கண்ணன் எனக்கு அவசரம் என சொல்லிவிட்டு கோபியை தள்ளிவிட்டு செல்கிறார், மூர்த்தி சின்ன பையன் பாவம் அவசரம் போல என சொல்ல கோபிக்கு என்ன செய்வது என தெரியவில்லை.

ஆப்ரேஷனை நினைத்து பதட்டமாக இருக்கும் பாரதி, ஹேமா வீட்டிற்கு வந்த லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

பின் கதிர் முல்லை எழில் மீனா வாக்கிங் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது முல்லை கதிர் காதல் கதையை மீனா சொல்கிறார். பின் நீங்க யாரையாவது காதலிக்கிறீர்களா என கேட்க எழில் வெட்கப்படுகிறார். வீட்டில் பாக்கியாவும் ஈஸ்வரியும் பேசிக் கொண்டிருக்க அப்போது தனம் வருகிறார். பிறந்தநாளுக்கு இன்னும் சிலரை கூப்பிட வேண்டும் என சொல்ல, தனம் நானும் உங்களுடன் வருகிறேன் என சொல்கிறார். பின் ஜீவாவும் ஐஸ்வர்யாவும் தாத்தாவுடன் பேசிக் கொண்டிருக்க அப்போது மூர்த்தி வந்து பேசுகிறார். அவர்களை பார்த்த சந்தோஷத்தில் ராமமூர்த்தி இருக்கிறார்.

ஈஸ்வரி தாத்தா சந்தோசமாக இருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார். பின் கோபி வந்து அமர தனம் காபி கொடுக்கிறார். இரவெல்லாம் தூங்கவில்லையா என தனம் கேட்க அப்படி எல்லாம் இல்லை என கோபி சொல்கிறார். அப்போது பாக்கியா வர யார் காபி கொடுத்தார் என கேட்கிறார். தனம் தான் என சொல்ல, இரவெல்லாம் நான் தூங்கவே இல்லை இருவருக்கும் நடுவே மாட்டிக் கொண்டு என்னால் தூங்கவே முடியவில்லை என கோபி கோபப்படுகிறார். அப்போது கண்ணன் வர கோபியை கிண்டல் செய்துவிட்டு கிளம்புகிறார். பின் கோபி வாக்கிங் போக மூர்த்தி நானும் வருகிறேன் என சொல்கிறார். அதை பார்த்து பாக்கியா சிரிக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here