கோபி ராதிகா பழக்கத்தை கண்டுபிடித்த மூர்த்தி, அப்பா பற்றி கதிரிடம் சொன்ன எழில் – “மகா சங்கமம்” சீரியல் இன்றைய எபிசோட்!

0
கோபி ராதிகா பழக்கத்தை கண்டுபிடித்த மூர்த்தி, அப்பா பற்றி கதிரிடம் சொன்ன எழில் -
கோபி ராதிகா பழக்கத்தை கண்டுபிடித்த மூர்த்தி, அப்பா பற்றி கதிரிடம் சொன்ன எழில் - "மகா சங்கமம்" சீரியல் இன்றைய எபிசோட்!
கோபி ராதிகா பழக்கத்தை கண்டுபிடித்த மூர்த்தி, அப்பா பற்றி கதிரிடம் சொன்ன எழில் – “மகா சங்கமம்” சீரியல் இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி உடன் ராதிகா இருப்பதை மூர்த்தி பார்த்துவிடுகிறார். பின் எழில் கதிரிடம் கோபிக்கு வேறு ஒரு தொடர்பு இருப்பதாக சொல்ல அதனால் மூர்த்தி தனத்திற்கு ராதிகா மீது சந்தேகம் வருகிறது. அதனால் ராதிகாவிடம் சென்று திருமணம் செய்ய இருப்பவர் பற்றி கேட்க ராதிகா கோபியின் புகைப்படத்தை காட்டுகிறார்.

மகா சங்கமம்:

இன்று மகா சங்கமம் சீரியலில், கோபி ராதிகா உடன் வெளியே நின்று பேசிக் கொண்டிருக்க அப்போது மூர்த்தி பார்த்துவிடுகிறார். கோபி ராதிகா உடன் நெருக்கமாக பேச அதை பார்த்து மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். பின் வீட்டிற்குள் வர அனைவரும் ஈஸ்வரி பாட்டி மிகவும் இளமையாக இருப்பதாக பேசிக் கொண்டிருக்கின்றனர் அதை கேட்டு ஈஸ்வரிக்கு பெருமையாக இருக்கிறது. பின் கதிரும் ஈஸ்வரிக்கு 35 வயது தான் இருக்குமா என கேட்க அப்பாவிற்கு 48 வயது ஆகிறது அப்போ உங்களுக்கு 65 வயசு இருக்குமே என சொல்கிறார். ஆமாம் என என ஈஸ்வரி சொல்ல உண்மையாகவே அப்படி தெரியவில்லை என பேசிக் கொண்டிருக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அப்போது கோபி ராதிகாவை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வருகிறார். எங்கே பால் பாக்கெட் என பாக்கியா கேட்க எந்த பாக்கெட் என தெரியாமல் கோபி கேட்கிறார். அப்போது மூர்த்தி பால் பாக்கெட் வாங்க தான போனீங்க என சொல்ல ஆமாம் என கோபி சொல்லி சமாளிக்கிறார். பின் மாடியில் செழியன் ஜீவா எழில் கதிர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செழியனும் ஜீவாவும் சென்றுவிட அப்போது கதிர் நீ மட்டும் ஏன் உன் அப்பாவிடம் சரியாக பேச மாட்டேங்கிறாய் என கேட்கிறார். அப்போது எழில் அதெல்லாம் வேற கதை என சொல்கிறார்.

என்ன ஆச்சு அவங்க எல்லாரும் நன்றாக பேசுகிறார்கள் நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிறாய் என கேட்க அப்போது எழில் வருத்தப்பட்டு அப்பாவிற்கு நாங்க மட்டும் இல்லை இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அது நான் குன்னக்குடி வந்த போது பார்த்துவிட்டேன் இது பற்றி அவரிடம் பேசியும் கேட்கவில்லை. அம்மா இனியா இதை தெரிந்தால் எப்படி நினைப்பார்கள் என கேட்கிறார். கதிருக்கு எழில் வருத்தப்பட்டு பேசியதை நினைத்து கண்ணீர் வருகிறது. பின் மூர்த்தி தனத்திடம் கோபி வெளியே ராதிகா உடன் நின்றதாகவும் வீட்டிற்குள் ஏன் அவர்களை பார்த்து பயந்தார் என தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.

பாரதி தான் அப்பா என தெரிந்து கொண்ட லட்சுமி, அதிர்ச்சியில் கண்ணம்மா – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!

அப்போது கதிர் வந்து எழில் சொன்னதை சொல்ல மூர்த்தியிடம் தனம் ராதிகா யாரையோ இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக சொல்கிறார். அப்போது மூர்த்திக்கு சந்தேகம் வருகிறது. மறுநாள் மூர்த்தியும் தனமும் ராதிகா வீட்டிற்கு செல்கின்றனர் . அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருக்க நீங்க திருமணம் செய்ய இருப்பவர் யார் என கேட்கிறார். அப்போது ராதிகா போனில் போட்டோவை காட்ட தனம் மூர்த்தி அதிர்ச்சி அடைகின்றனர். பின் பாக்கியாவின் கணவர் பெயர் கோபி என சொல்ல ராதிகாவுக்கு அது கூட தெரியாமல் இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here