விஜய் டிவி அர்ச்சனாவின் மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபர் – அவரே அளித்த ‘நச்’ பதிலடி!

0
விஜய் டிவி அர்ச்சனாவின் மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபர் - அவரே அளித்த 'நச்' பதிலடி!
விஜய் டிவி அர்ச்சனாவின் மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபர் - அவரே அளித்த 'நச்' பதிலடி!
விஜய் டிவி அர்ச்சனாவின் மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபர் – அவரே அளித்த ‘நச்’ பதிலடி!

சின்னத்திரை உலகில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி இன்று வெள்ளித்திரையில் நடிக்கும் ஒரு நடிகையாக மாறிய அர்ச்சனா, தனது மகள் ஜாராவை திருமணம் செய்ய முற்படுகிறவர்களுக்கு அளித்த பதில் ஒன்று ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

தொகுப்பாளினி அர்ச்சனா :

சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் ஷோ மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் அர்ச்சனா. அதன் பிறகு, விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், மற்றும் கலைஞர் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதை தொடர்ந்து கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் அதிகளவில் பேசப்படும் ஒருவராக மாறினார்.

முன்னணி சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாநாயகிகள் – ரசிகர்கள் அதிர்ச்சி! வைரலாகும் புகைப்படம்!

இவ்வாறு தொகுப்பாளினி, போட்டியாளர் என சின்னத்திரையில் கலக்கியவர் நெல்சன் இயக்கத்தில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக அவரது மகள் ஜாராவும் இந்த படத்தில் தான் அறிமுகமாகியிருந்தார் என்பதும் சொல்ல வேண்டிய விஷயம் ஆகும்.

ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு – மாதம் ரூ.8000/- உதவித்தொகை

மேலும், இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவ் ஆக இருக்கும் ஜாரா மற்றும் அர்ச்சனா தினசரி ஏதாவது ஒரு போஸ்டை பதிவு செய்தே வருவார்கள். அதை தொடர்ந்து நேற்று கேள்வி வினா விளையாட்டை பதிவிட்டு இருவரும் பதிலளித்து வந்தார்கள். அதில் ஜாராவின் ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்ற கேள்வியை கேட்டிருந்தார். அதற்க்கு அர்ச்சனா அவருடைய பாணியில் நக்கலாக ‘உன் அம்மா அப்பாவை பதினஞ்சு வருஷம் கழிச்சு என்ன வந்து பாக்க சொல்லுப்பா’ என்று பதிலளித்து சிரிக்கவைத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here