விஜய் டிவி ஆலியா மானசா, சஞ்சீவ் ஜோடி செய்த சாதனை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி ஆலியா மானசா, சஞ்சீவ் ஜோடி செய்த சாதனை - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ஆலியா மானசா, சஞ்சீவ் ஜோடி செய்த சாதனை - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ஆலியா மானசா, சஞ்சீவ் ஜோடி செய்த சாதனை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் சேர்ந்து நடத்தி வரும் யூடியூப் பக்கம் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது. அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

ஆலியா & சஞ்சீவ்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜாராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து பெற்றோரின் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் திருமணத்திற்கு பிறகும் கூட அதே போல இருப்பதில்லை. காதலிக்கும் போது ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுகின்றனர். அதன் பின்னர் குழந்தை குடும்பம் என வந்த பிறகு பழைய காதலர்களை போல இருப்பதே இல்லை. திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். இவருக்கு ஐலா பாப்பா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது.

Exams Daily Mobile App Download

ஐலா பாப்பா பிறந்து சில மாதங்களிலேயே மீண்டும் ராஜா ராணி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இந்த தொடருக்கு பிறகு ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா-ராணி சீசன் 2 சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பாதையில் பயணித்து கொண்டிருக்கும் கயல் தொடரில் நடித்து கொண்டிருக்கிறார்.

முல்லைக்கு முன் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீர் திருப்பம்!

ஐலா பாப்பாவின் இரண்டாவது பிறந்த நாளான மார்ச் 20 அன்று ஆலியாவிற்கு கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றது. தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் கூட ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் பழைய காதலர்களாகவே இருந்து வருகின்றனர். ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் இணைந்து யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகின்றனர். அவ்வப்போது அந்த யூடியூப் பக்கத்தில் சிறப்பு நிகழ்வுகள், ஐலா பாப்பா வீடியோ, குட்டி பையன் வீடியோ என அனைத்தையும் பதிவிட்டபடி இருக்கிறார். தற்போது இவர்களது யூடியூப் பக்கம் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது. அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here