வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் விஜய் டிவி நடிகை ஸ்ரேயா அஞ்சன் – ரசிகர்கள் வாழ்த்து!

0
வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் விஜய் டிவி நடிகை ஸ்ரேயா அஞ்சன் - ரசிகர்கள் வாழ்த்து!
வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் விஜய் டிவி நடிகை ஸ்ரேயா அஞ்சன் - ரசிகர்கள் வாழ்த்து!
வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் விஜய் டிவி நடிகை ஸ்ரேயா அஞ்சன் – ரசிகர்கள் வாழ்த்து!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நடிகை ஸ்ரேயா அஞ்சன் தற்போது ‘ஐந்து உணர்வுகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா அஞ்சன்

தற்போது சின்னத்திரை தொடர்களில் கிடைக்கும் பிரபலத்தை வைத்து பல நடிகர், நடிகைகள் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு தேடி வருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சினிமா வாய்ப்புக்காகவே பலரும் சீரியல்களில் நடித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் வெள்ளித்திரை நட்சத்திங்களுக்கு கொடுத்து வரும் அதே அளவு ஆதரவையும் ரசிகர்கள் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கும் கொடுத்து வருகின்றனர்.

‘பாக்கியலட்சுமி’ ரேஷ்மாவின் சிங்கிள் மதர் ஸ்டோரி – திருமண தோல்வி டூ சீரியல் வெற்றி!

அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திக்கேயன் துவங்கி வாணி போஜன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் தங்களது சினிமா பயணத்தை சின்னத்திரை மூலம் துவங்கியவர்கள் தான். இப்படி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழும் பலரும் விஜய் தொலைக்காட்சியை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சின்னத்திரையில் கிடைத்த ஆதரவை வைத்து விஜய் டிவியின் மற்றுமொரு சீரியல் நடிகை வெள்ளித்திரையில் தடம் பதிக்க இருக்கிறார்.

அதாவது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் ஜனனி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த மலையாள நடிகை ஸ்ரேயா அஞ்சன் தற்போது ‘ஐந்து உணர்வுகள்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைய இருக்கிறார். இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் காதலித்து வருகின்றனர். அந்த வகையில் ‘திருமணம்’ சீரியலை முடித்த கையோடு நடிகை ஸ்ரேயா அஞ்சன் ‘அன்புடன் குஷி’ என்ற விஜய் டிவி சீரியலில் நடித்திருந்தார்.

விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ சீசன் 5 – பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்?

நடிகர் சித்து தற்போது விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வருகிறார். தற்சமயம் நடிகை ஸ்ரேயா அஞ்சன் நடித்துள்ள ‘ஐந்து உணர்வுகள்’ என்ற திரைப்படத்தை ‘பாரதியார்’, ‘பெரியார்’ போன்ற திரைப்படங்களின் இயக்குநர் ஞான ராஜசேகரன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஆர். சூடாமணி எழுதிய ‘அம்மா பிடிவாதக்காரி’ என்ற கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!