‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா முதல் ‘பிக் பாஸ்’ வனிதா விஜயகுமார் வரை – YouTube மூலம் பணத்தை அள்ளும் பிரபலங்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா முதல் 'பிக் பாஸ்' வனிதா விஜயகுமார் வரை - YouTube மூலம் பணத்தை அள்ளும் பிரபலங்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா முதல் 'பிக் பாஸ்' வனிதா விஜயகுமார் வரை - YouTube மூலம் பணத்தை அள்ளும் பிரபலங்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா முதல் ‘பிக் பாஸ்’ வனிதா விஜயகுமார் வரை – YouTube மூலம் பணத்தை அள்ளும் பிரபலங்கள்!

அந்த காலம் முதல் நடிகை நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்கள் மத்தியில் இருக்கிறது. அதை சுலபமாக்க தற்போது பல சின்னத்திரை பிரபலங்கள் தங்களது யூடுப் சேனல்கள் மூலம் தங்களது அன்றாட வாழ்க்கை பற்றி பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் யூடுப் மூலம் அதிகம் பணம் சம்பாரிக்கும் நடிகைகள் குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

யூடுப் பிரபலங்கள்:

தமிழ் சினிமாவை விட சீரியல் நடிகர், நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சீரியல் நடிகை நடிகர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் அப்போதைய காலகட்டத்தில் இல்லை. ஆனால் தற்போது பல நடிகைகள் தனது சொந்த யூடுப் சேனல் மூலமாக தங்களது வாழ்க்கை முறைகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கு நடிப்பதை விட அதிகமான வருமானம் அந்த சேனல்கள் மூலமாக வருகிறது. அவர்கள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

சுஜிதா தனுஷ் :

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர் நடித்து வருகிறார். அதில் தனம் கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட குடும்ப ரசிகர்கள் உண்டு. தனியாக யூடுப் சேனல் நடத்தி வரும் அவர் அதில் தன் குடும்பம் பற்றியும் உடல் எடை குறைப்பு குறித்த வீடியோக்களையும் பதிவிடுவார். அதில் அவர் 5.12 லட்சம் சப்ஸ்கிரைபரை வைத்திருக்கிறார்.

ஹேமா ராஜ்குமார்:

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா என்றால் அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு அவர் பிரபலமானவர். அவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் நல்ல பிரபலத்தை கொடுத்தது. அவர் ஹேமா டைரி என்ற யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதில் குழந்தை வளர்ப்பு குறித்தும், குறைந்த விலையில் எங்கே ஆடை வாங்கலாம் என்பது பற்றி பல வீடியோக்களை பதிவிடுவார். அவருக்கு இதுவரை 7.05 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸை இருக்கின்றனர்.

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ‘மூர்த்தி’ வீட்டில் நடந்த சோகம் – ரசிகர்கள் இரங்கல்!

வனிதா விஜயகுமார்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது வனிதா விஜயகுமார் தான். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் இல்லை என்றாலும் அந்த நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இந்நிலையில் அவர் தனது மூன்றாவது கணவருடன் இணைந்து யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். அதில் பல சமையல் ரெசிபிக்களை அவர் கொடுத்து வந்தார். ஆனால் தனது கணவரை பிரிந்த பின் அவர் சேனலில் அதிகமாக வீடியோக்கள் வருவதில்லை. அவர் தற்போது 7.38 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸை வைத்திருக்கிறார்.

ரித்திகா தமிழ்ச்செல்வி :

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரித்திகா தமிழ்ச்செல்வி அவர் தனது சொந்த பெயரில் ராணியக்கா யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தற்போது 1 லட்சம் சப்ஸ்கரைப்பர்களை வைத்திருக்கிறார்.

ஷிவாங்கி:

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் ஷிவாங்கி. அவர் அந்த நிகழ்ச்சியை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டது மூலமாக பிரபலமானவர். தனியாக யூடுப் சேனல் நடத்தி வரும் அவர் தற்போது வரை 1.69 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை வைத்து இருக்கிறார்.

நக்ஷத்ரா நாகேஷ்

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வரியும் சீரியலில் இவர் நடித்து வருகிறார். ஆங்கராக இருந்து பின் சீரியலில் நுழைந்த அவர் தமிழ் சின்னத்திரையில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். அவர் தனியாக யூடுப் சேனல் நடத்தி வரும் நிலையில் அதில் 2.51 லட்சம் சப்ஸ்கரைபர்களை வைத்திருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!