தனது அம்மா பெயர் கண்ணம்மா என்று கூறும் ஹேமா – என்ன சொல்ல போகிறார் பாரதி??

0
தனது அம்மா பெயர் கண்ணம்மா என்று கூறும் ஹேமா - என்ன சொல்ல போகிறார் பாரதி??
தனது அம்மா பெயர் கண்ணம்மா என்று கூறும் ஹேமா - என்ன சொல்ல போகிறார் பாரதி??
தனது அம்மா பெயர் கண்ணம்மா என்று கூறும் ஹேமா – என்ன சொல்ல போகிறார் பாரதி??

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாரதி கண்ணம்மா”. தற்போது இந்த சீரியலில் பாரதியின் குழந்தையான ஹேமா தனது அம்மாவின் பெயரை தெரிந்து கொள்கிறார்.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பல சீரியல்கள் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றது. காரணம், கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு இடையே உள்ள காதலை அழகாக எடுத்து காட்டியது தான். பின், நாயகியான கண்ணம்மாவின் மீது நாயகனான பாரதிக்கு ஒரு கட்டத்தில் சந்தேகம் வலுத்து இருவரும் பிரிந்து விட்டனர். இப்படியாக இருக்க, தற்போது பல விறுவிறுப்பான காட்சிகளுடன் கதைக்களம் இருந்து வருகின்றது. இருவரின் இரட்டை குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர்.

இருவருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா தான் தங்களின் பெற்றோர் என்று தெரியாது. இப்படியாக இருக்க, ஹேமா அனைத்து இடங்களிலும் தனது அம்மாவின் பெயர் “கண்ணம்மா” என்று எழுதி வைக்கிறார். இதனால் அஞ்சலி மற்றும் சௌந்தர்யா அதிர்ச்சி அடைகின்றனர். சௌந்தர்யா ஹேமாவிடம், ‘உனக்கு எப்படி கண்ணம்மா தான் உன் அம்மா பேர்னு தெரியும்’ என்று கேட்கிறார். அதற்கு ஹேமா, ‘அப்பாவோடு பாஸ்போர்ட் ஆபீஸ் போனேன். அங்க அம்மா பேர் அப்படின்ற இடத்துல கண்ணம்மானு தான் போட்ருந்தாங்க’ என்று கூறுகிறார். பின், ஹேமா தனது அம்மா பெயரை கண்டுபிடித்து விட்டதாக கூறுகிறார்.

இதனை ஆர்வமுடன் கேட்கும் பாரதி கண்ணம்மாவின் பெயரை ஹேமா கூறியதும் தனது அம்மா சௌந்தர்யாவை முறைக்கிறார். பின், ஹேமா தான் சரியாய் சொல்லிவிட்டதாக கூறியதும், பாரதியும் ஹேமாவிடம், ‘உன் அம்மா பேர் கண்ணம்மா தான்’ என்று கூறுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here