விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ செப்.9 இல் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!

0
விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' செப்.9 இல் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு!
விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' செப்.9 இல் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு!
விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ செப்.9 இல் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘லாபம்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

‘லாபம்’ :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் தவிர்க்கமுடியாத நாயகனாகவும் அவதரித்து வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து படங்களை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அவ்வப்போது மாஸ் ஆன படங்களும் சில நேரங்களில் க/பெ.ரணசிங்கம் போன்ற விழிப்புணர்வு படங்களையும் கொடுத்து வருபவர். சில நாட்களாக முழுவதும் வில்லனாக அவதரித்து வருகிறார் விஜய் சேதுபதி.மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து கமல் அவர்களின் விக்ரம் படத்தில் வில்லனாக களமிறங்குகிறார்.

தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – 1.23 கோடி ரூபாய் நோய் தடுப்பு பணிக்கு ஒதுக்கீடு!

வில்லன் பாணியில் பயணித்து வரும் நாயகன் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வந்த லாபம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் டி.இமான் இசையமைக்க, ஆறுமுககுமார், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

தயாரிப்பு பணிகள் முடிந்த நிலையில் OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் தியேட்டர்கள் திறப்பு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்ததால் படக்குழு காத்திருந்தது. தற்போது தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது செப்டம்பர் 9ம் தேதி திரைப்படத்தை வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் உணவு அரசியல் உள்ளிட்ட புரட்சிகரமான விஷயங்கள் பேசப்பட்டுள்ளது என பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!