விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி – ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி - ரசிகர்கள் கொண்டாட்டம்!
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி - ரசிகர்கள் கொண்டாட்டம்!
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்துள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களில் பலர் வெற்றி பெற்று இருக்கின்றனர். அதனால் இளையதளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

வேட்பாளர்கள் வெற்றி:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறவில்லை. அதன் பின் நடந்து முடிந்த ஆட்சி மாற்றத்திற்கு பின் உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் இந்த தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப். 22) நடைபெறுகிறது. அதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அவர்களில் பலர் வெற்றி பெற்றிருக்கின்றனர். புதுக்கோட்டை 4-வது வார்டில் போட்டியிட்ட பரமேஷ். ராணிப்பேட்டை பாலாஜி வார்டு நகராட்சியில் 3வது வார்டில் போட்டியிட்ட மோஹன்ராஜு இருவரும் வெற்றி பெற்று இருக்கின்றனர். நாமக்கல்தேனியிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள், சென்னையை பொறுத்தவரை 3000 வாக்குகள் முன்னிலையில் இருக்கின்றனர். சென்னை 136வது வார்டில் ஆளும் கட்சியை விட முன்னிலையில் இருக்கின்றனர்.

WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு – செயலியில் புதிய குரல் அழைப்பு வசதி விரைவில் அறிமுகம்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் பலர் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பலர் வெற்றி பெற்று இருக்கின்றனர். தளபதி என்றாலே பல இளைஞர்கள் விருப்பமாக இருந்தாலும், அவருடைய பெயரை பயன்படுத்தி பல சமூக சேவைகளை அவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர். அவர் தற்போது அரசியலுக்கு வராமல் இருந்தாலும் அவரது பெயர் வைத்து செய்யும் தொண்டர்களுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து தான் வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!