விஜய் டிவி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

0
விஜய் டிவி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
விஜய் டிவி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
விஜய் டிவி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

விஜய் டிவியின் மாப்பிள்ளை, ராஜா ராணி மற்றும் மகராசி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை வைஷாலி தனிகா, தனக்கு திருமணம் ஆக இருப்பது குறித்து தனது பிறந்தநாளில் அறிவித்துள்ளார்.

நடிகை வைஷாலி தனிகா:

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை வைஷாலி தனிகா. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை, ராஜா ராணி மற்றும் மகராசி போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார். தற்போது கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் வைஷாலி தனிகா நடித்து வருகிறார். வைஷாலி தனிகா இதுவரை நடித்த சீரியல்களில் எல்லாம் பெரும்பாலும் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் படப்பிடிப்பில் திடீர் மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி! தீவிர சிகிச்சை!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது பிறந்தநாள் அன்று புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதுதான் தனது கடைசி பேச்சிலர் பிறந்தநாள் என்று கூறி விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை உறுதி செய்துள்ளார்.விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி தனிகா செப்டம்பர் 28ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருடைய பிறந்த நாளில், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விவரம் – இறுதி பட்டியல்!

இந்நிலையில் அன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பிறந்தநாள் புகைப்படத்தை பகிர்ந்து அதில், “பேச்சிலராக இது என்னுடைய கடைசி பிறந்த நாள். விரைவில் நான் திருமதி தேவ் ஆகப் போகிறேன். அதற்கு பிறகு எல்லாமே குடும்பம்தான். நீங்கள் தான் என் நாளை மகிழ்ச்சியானதாக மாற்றியுள்ளீர்கள். சத்யா தேவ் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவர் விரைவில் தனது காதலர் சத்யா தேவ்-ஐ திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!