Vijay Hazare Trophy அரையிறுதி போட்டி – தமிழ்நாடு அணிக்கு 311 ரன்கள் இலக்கு!

0
Vijay Hazare Trophy அரையிறுதி போட்டி - தமிழ்நாடு அணிக்கு 311 ரன்கள் இலக்கு!
Vijay Hazare Trophy அரையிறுதி போட்டி - தமிழ்நாடு அணிக்கு 311 ரன்கள் இலக்கு!
Vijay Hazare Trophy அரையிறுதி போட்டி – தமிழ்நாடு அணிக்கு 311 ரன்கள் இலக்கு!

2021-2022 ஆண்டுக்கான விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தட்டார் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சௌராஷ்டிரா, தமிழ்நாடு அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பௌலிங்கை தேர்வு செய்துள்ளது.

அரையிறுதி போட்டி:

விஜய் ஹசாரே டிரோபியின் 2வது அரையிறுதி போட்டி ஜெய்ப்பூரில் KL சைனி மைதானத்தில் நடந்து கொண்டு வருகிறது. தமிழ்நாடு, சௌராஷ்டிரா மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் சங்கர் பௌலிங்கை தேர்வு செய்தார். லீக், காலிறுதி போட்டிலும் தமிழ்நாடு அணி சிறப்பாக பந்து வீசியது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அம்பயர்களாக அணில் சவுதரி, சம்சுதீன் களத்தில் இருந்தனர். டிவி அம்பயராக சக்தி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர்களாக ஜடேஜா, ஹர்விக் தேசை நிதானமாக ஆடினார்கள். தேசை 9 ரூல்ஸ் எடுத்திருந்த பொது சிலம்பரசன் பதில் LBW முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பொறுமையாக விளையாடிய ஜடேஜா 74 பந்துகளில் அரைசதம் அடித்தார். 6 பவுண்டரிகள் 1 சிக்ஸர் விளாசி அசத்தினார். 52 ரன்கள் எடுத்திருந்த பொது சித்தார்த் பதில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பின்பு களம் இறங்கிய ஜாக்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

TNPSC தேர்வு பாடத்திட்டத்தில் திருக்குறள் முழுவதும் நீக்கம் – சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி!

அதிரடியாக விளையாடிய ஜாக்சன் சதம் அடித்தார். 11 பவுண்டரிகள், 4 சிக்சர்களை அடித்த ஜாக்சன் 125 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். அவரோடு ஜோடி சேர்ந்த மங்கட் மற்றும் ஆர்பிட் சிறப்பான அத்தை வெளிப்படுத்தினார்கள். 134 ரன்கள் எடுத்த ஜாக்சன் தமிழ்நாடு கேப்டன் விஜய் ஷங்கர் பந்தில் அவுட் ஆனார். ஜாக்சன் விக்கெட் போனாலும் ஆர்பிட் அரைசதம் அடித்ததால் சௌராஷ்டிரா அணி பெரிய இலக்கை எட்டியது. முதல் இன்னிங்ஸ் முடிவில் சௌராஷ்டிரா அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. தமிழ்நாடு தரப்பில் விஜய் ஷங்கர் 4 விக்கெட்டும் சிலம்பரசன் 3 விக்கெட்டும் எடுத்தனர். 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் தமிழ்நாடு அணி களமிறங்க உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!