புது வீடு கட்டி குடியேறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” விஜே தீபிகா – வைரலாகும் வீடியோ!

0
புது வீடு கட்டி குடியேறிய
புது வீடு கட்டி குடியேறிய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" விஜே தீபிகா - வைரலாகும் வீடியோ!
புது வீடு கட்டி குடியேறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” விஜே தீபிகா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யாவை நாம் எளிதில் மறந்திருக்க மாட்டோம். தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வந்தாலும், ஐஸ்வர்யா என சொன்னால் விஜே தீபிகா தான் நியாபகத்திற்கு வருகிறார். தற்போது விஜே தீபிகா தன்னுடைய சொந்த காசில் அம்மா, அப்பாவிற்கு வீடு கட்டி கொடுத்து அதற்கு கிரகப்பிரவேசம் நடந்து குடியேறி இருக்கிறார்.

நடிகை விஜே தீபிகா:

பிரபலமான சீரியல்களில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அது மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடும். அந்த வகையில் விஜய் டிவியில் கூட்டு குடும்பக் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் விஜே தீபிகா. கண்ணன் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்ய அதனால் சீரியல் கதையில் பெரிய திருப்பம் வந்தது. லட்சுமி அம்மா கண்ணன் பிரிவு தாங்க முடியாமல் இறந்து விடுகிறார்.

Exams Daily Mobile App Download

ஆனால் அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்றப்பட்டது. விஜே தீபிகாவிற்கு முகப்பரு பிரச்சனை இருந்ததால் அவரை சீரியலில் இருந்து விலகினார்கள். ஆனால் மனம் தளராத தீபிகா தன்னுடைய முகப்பரு பிரச்சனையை சரி செய்து யூடுயூப்பில் வீடியோ வெளியிட்டார். ஆனாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒரு சில கதாபாத்திரங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார்.

“வாழ்ந்தா மன நிம்மதியோட வாழனும்” குக் வித் கோமாளி சுனிதா உருக்கமான பதிவு – ரசிகர்கள் ஷாக்!

அவருக்கு சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது. அந்த வகையில் விஜே தீபிகா தனது அம்மா அப்பாவிற்கு தான் சம்பாரித்த காசில் புதிய வீடு ஒன்று கட்டி கொடுத்திருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றை ஏற்கனவே அவர் வெளியிட்டார். தற்போது அவர் அந்த புது வீட்டில் பால் காய்ச்சி குடியேறி இருக்கிறார். சிறிய வீடாக இருந்தாலும் அம்மா அப்பாவிற்கு ஏதோ பெரிதாக செய்தது போல உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!