‘தளபதி 65 அப்டேட்’ – விஜயுடன் இணையும் முக்கிய பிரபலம்! மாஸ்டரையே ஓரங்கட்டிடும் போல!

0
'தளபதி 65 அப்டேட்' - விஜயுடன் இணையும் முக்கிய பிரபலம்! மாஸ்டரையே ஓரங்கட்டிடும் போல!
'தளபதி 65 அப்டேட்' - விஜயுடன் இணையும் முக்கிய பிரபலம்! மாஸ்டரையே ஓரங்கட்டிடும் போல!
‘தளபதி 65 அப்டேட்’ – விஜயுடன் இணையும் முக்கிய பிரபலம்! மாஸ்டரையே ஓரங்கட்டிடும் போல!

தமிழ் திரையுலகில் தளபதியாக வலம் வரும் விஜயின் 65 வது திரைப்படத்தை பற்றிய ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

தளபதி 65 அப்டேட்:

தளபதி விஜய் படங்கள் என்றாலே தமிழகத்தில் தனி வரவேற்பு தான். அதுவும் சில வருடங்களாக தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார். ஏனெனில் வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார். இதுதான் அவரின் தொடர் வெற்றிக்கு காரணமாக கூட இருக்கலாம். ஆரம்பத்தில் சில பத்திரிகைகளில் இவரை பற்றிய இழிவான விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது அவரை தான் தமிழ் திரையுலகமே தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது.

SBI வங்கியில் ஜூலை 1 முதல் சேவை கட்டணம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!

கடந்த வருடம் ரிலீஸ் ஆன மாஸ்டர் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புக்கு இடையே மகத்தான வெற்றியை பெற்றது. இந்நிலையில் தற்போது தளபதி 65 உருவாகி வருகிறது. இந்த கூட்டணியும் அனைத்துமே புதிது தான். அதாவது நெல்சன் முதன்முதலாக விஜயை வைத்து இயக்குகிறார். மேலும் இதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதனால் தான் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் கொரோனா காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாஸ்டர் படத்தின் நிலை வந்து விடுமோ என்றும் பலரும் பதட்டத்தில் உள்ளனர். இப்பொழுது அனைவர்க்கும் ஆறுதலளிக்கும் வகையில் தளபதி 65 பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு இணைந்துள்ளார். அதனை ரசிகர் ஒருவர் துருவி துருவி கேட்க ஆமாம் என்று அவரே ட்விட்டரில் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!