கடை கட்டுவதில் புது பிரச்சனையை உருவாக்கும் முல்லை, அதிர்ச்சியில் குடும்பம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

0
கடை கட்டுவதில் புது பிரச்சனையை உருவாக்கும் முல்லை, அதிர்ச்சியில் குடும்பம் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ!
கடை கட்டுவதில் புது பிரச்சனையை உருவாக்கும் முல்லை, அதிர்ச்சியில் குடும்பம் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ!
கடை கட்டுவதில் புது பிரச்சனையை உருவாக்கும் முல்லை, அதிர்ச்சியில் குடும்பம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய கடை கட்டும் விஷயத்தில் முல்லை மற்றும் மூர்த்திக்கு இடையே சில வாக்குவாதங்கள் எழுந்தவாறு அடுத்த கட்ட கதைக்களத்துக்கான ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கடந்த சில நாட்களாக சுமூகமாக வெளியாகி கொண்டிருந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது புதிய பிரச்சனை உருவாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த வார எபிசோடுகளை கவனித்து பார்க்கையில், தனத்தின் குழந்தை மீது அன்பு காட்டும் குடும்பத்தினர் கயலை கண்டு கொள்வதில்லை என மீனா சில குற்றசாட்டுகளை முன் வைக்கிறார். அதனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் அடுத்த பிரச்சனை மீனாவை வைத்து உருவாக்கப்படலாம் என ரசிகர்கள் கணித்திருந்தனர்.

Central Bank of India பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் – தேர்வு எழுத தேவையில்லை!!

ஆனால் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில், அதில் முல்லை புதிய பிரச்சனையை கொண்டு வந்துள்ளார். அதாவது புதிய கடை கட்டும் பணியை கதிர் கவனித்து வருகிறார். இப்போது, கடைக்கு சம்பந்தப்பட்ட ஒருவரிடம் கொடுக்க வேண்டிய பணத்தை கதிர் கொடுக்க மறந்து விடுகிறார். இதனால், கடை கட்டும் இடத்தில் நீ சும்மா தானே இருக்கிற, ஏன் அந்த பணத்தை கொடுக்க மறந்த என மூர்த்தி, ஜீவா இருவரும் கதிரை கேள்வி கேட்கின்றனர். இதை பார்த்து கொண்டிருக்கும் முல்லை, கதிர் ஒரு வேலையும் செய்யவில்லை என கூற வேண்டாம்.

கோபி, ராதிகாவை பிரிக்க களமிறங்கிய அப்பா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அங்கு வேலை பார்க்கும் எல்லாருடனும் சேர்ந்து கதிரும் வேலை பார்க்கிறார் என கூறுகிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடையும் மூர்த்தி, நீ ஏன் கதிர் அங்கு வேலை செய்கிற என கேட்க அதற்கு தனம் அக்காவும், மீனாவும் கடை கட்டுவதற்கு அவர்களின் நகையை கொண்டு வந்து கொடுத்தார்கள். எங்களிடம் கொடுக்க ஒன்றும் இல்லை. அதனால் உழைப்பை கொடுக்கிறோம் என முல்லை பதில் கூறுகிறார். முல்லையின் பேச்சை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் நிற்கின்றவாறு புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here