விக்னேஷ் சிவன் & நயன்தாராவிற்கு திருமணம் – ஜூன் 11 ஆம் தேதி ரசிகர்களுடன் சந்திப்பு!

0
விக்னேஷ் சிவன் & நயன்தாராவிற்கு திருமணம் - ஜூன் 11 ஆம் தேதி ரசிகர்களுடன் சந்திப்பு!
விக்னேஷ் சிவன் & நயன்தாராவிற்கு திருமணம் - ஜூன் 11 ஆம் தேதி ரசிகர்களுடன் சந்திப்பு!
விக்னேஷ் சிவன் & நயன்தாராவிற்கு திருமணம் – ஜூன் 11 ஆம் தேதி ரசிகர்களுடன் சந்திப்பு!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள பிரம்மாண்டமான ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் திருமண வேலைகள் அனைத்தும் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நயன்தாராவின் திருமணம்:

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் எப்போது என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் திருமணத் தேதியை முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். முதலில் விக்னேஷ் மற்றும் நயன்தாராவின் திருமணம் திருப்பதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெறுவதாக இருந்தது. பின்பு, அதில் சில சிக்கல்கள் இருந்த காரணத்தினால் மகாபலிபுரத்தில் உள்ள பெரிய ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் திருமணத்தை வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

தளபதி விஜய் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – வெளியான ஹாப்பி நியூஸ்!

திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் அனைவரையும் அழைக்காமல் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் குடும்பத்தினர்கள் மற்றும் இருவரின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கிறார்கள் என விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் திருமண வேலைகள் அனைத்தும் தடபுடலாக நடைபெற்று கொண்டிருக்கிறது. திருமணம் முடிந்த கையோடு ஜூன் 11ஆம் தேதி விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சேர்ந்து மீடியாவை சந்திக்க உள்ளனர்.

Exams Daily Mobile App Download

எனது பர்சனல் லைப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறேன். இதுவரைக்கும் நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் கேட்டுக்கொண்டுள்ளார். திருமணத்திற்கு வந்து ஆசிர்வதிக்குமாறு முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினுடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், திருமணம் முடிந்ததும் திருமண புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலை பக்கங்களில் வெளியிடுவதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here