பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட வீடியோ – “வாடா ராசா” பாடலுக்கு ஆட்டம்!

0
பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட வீடியோ -
பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட வீடியோ - "வாடா ராசா" பாடலுக்கு ஆட்டம்!
பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட வீடியோ – “வாடா ராசா” பாடலுக்கு ஆட்டம்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக பிரபலமடைந்த ரோஷினி ஹரிபிரியன் தற்போது, நடிகர் கருணாஸ் மகன் மனைவி கென் கருணாஸ், கிரேஸ் கருணாஸ், சித்தி-2 புகழ் நடிகை ப்ரீத்தி ஷர்மா ஆகியோர் நடித்துள்ள “வாடா ராசா”என்ற ஆல்பம் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா ரோலில் நடிப்பவர் ரோஷினி ஹரிபிரியன். முன்னதாக சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்த அவர் அவ்வப்போது மாடலிங் செய்து வந்தார். அதன் மூலமாக இந்த சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கருப்பாக இருப்பதும் அழகு தான் என்பதை இவர் நிரூபித்துள்ளார். மாமியார் வீட்டை விட்டு கர்ப்பிணியாக இருந்த கண்ணம்மா வெளியேறி பல எபிசோட்களுக்கு பல கிலோ மீட்டர்கள் நடந்து கொண்டே இருப்பதை போல ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மீம் கிரியேட்டர்களுக்கு பெரிய கண்டென்ட்டாக இருந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் தகவல்!

இதுவே அவர் பிரபலமடைய முக்கிய காரணம் ஆகும். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவரை பல ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. லட்சுமி கண்ணம்மாவின் பெண் என்பதை அறிந்து கொண்ட பாரதி, அதை அவள் வாயாலேயே சொல்ல வைக்க எடுக்கும் முயற்சிகள், பாரதியின் வீட்டில் வளரும் ஹேமா அவர்கள் இருவருக்கும் பிறந்த பெண் தான் என்பது பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு தெரிய வருமா என்கிற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

இஸ்ரோ வழங்கும் தொழில்நுட்ப பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் நடிகர் கருணாஸின் மகன் மற்றும் மனைவி கென் கருணாஸ், கிரேஸ் கருணாஸ், சித்தி-2 புகழ் நடிகை ப்ரீத்தி ஷர்மா ஆகியோர் நடித்துள்ள “வாடா ராசா” என்ற ஆல்பம் பாடல் நேற்று வெளியான நிலையில் அந்த பாடலுக்கு ரோஷினி குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் கலாச்சாரம், விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவம், வேட்டி மற்றும் புடவை அணிவதன் சிறப்புகள் உள்ளிட்டவற்றை கருவாக கொண்டு தயாராகி உள்ள இந்த பாடலை யூடியூபில் இதுவரை 1.3 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!