தமிழகத்தில் 12ம் வகுப்பு ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கான வீடியோ பாடம் – CEO உத்தரவு!!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கான வீடியோ பாடம் - CEO உத்தரவு!!தமிழகத்தில் 12ம் வகுப்பு ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கான வீடியோ பாடம் - CEO உத்தரவு!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கான வீடியோ பாடம் - CEO உத்தரவு!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கான வீடியோ பாடம் – CEO உத்தரவு!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு ஆங்கில வலையில் படிக்கும் மாணவர்களுக்கான வீடியோ பாடங்கள் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் மாணவர்களுக்கு மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு திட்டம்:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 11 அல்லது 12ம் வகுப்பு படிக்கும் போது அரசு இலவச மடிக்கணினியை வழங்கிவிடும்.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் & ஓய்வூதியம் – ஆளுநர் அனுமதி!!

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்காத நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் மடிக்கணினியில் 12ம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் வீடியோ முறையில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் அனைவரும் மிகுந்த பலனடைந்தனர். ஆனால் தமிழ் வழியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வீடியோக்கள் தயார் நிலையில் இருந்ததால் அவர்களுக்கு மட்டுமே பாடங்கள் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ஆங்கில வழி மாணவர்கள்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பாடங்கள் முழுமையாக தயாரிக்கப்படாமல் இருந்த காரணத்தால் ஆங்கில வழி மாணவர்களுக்கு வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து வழங்கப்படவில்லை. தற்போது அரசு குறைத்துள்ள பாடத்திட்டத்தின் படி, பாடங்கள் தயாரிக்கப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வீடியோக்கள் வழங்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்ட வீடியோக்களை இரண்டு நாட்களுக்குள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!