Vi வழங்கும் வருடம் முழுவதுக்குமான இலவச டேட்டா திட்டம் – முழு விவரங்கள்!

0
Vi வழங்கும் வருடம் முழுவதுக்குமான இலவச டேட்டா திட்டம் - முழு விவரங்கள்!
Vi வழங்கும் வருடம் முழுவதுக்குமான இலவச டேட்டா திட்டம் - முழு விவரங்கள்!
Vi வழங்கும் வருடம் முழுவதுக்குமான இலவச டேட்டா திட்டம் – முழு விவரங்கள்!

தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தையில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. இதனால் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள பல விதமான சிறப்பு திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன.

வருடம் முழுவதும் டேட்டா:

தற்போது தொலைபேசி அழைப்புகளை விட இணைய வசதி இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடக்காது. நமது அன்றாட வாழ்வின் அவசிய தேவைகளில் ஒன்றாக இணைய வசதி மாறிவிட்டது. இதனால் பலர் வருடம் முழுவதுக்குமான திட்டங்களை தேர்வு செய்கின்றனர். மேலும், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நடைமுறை அதிகரித்து உள்ளதாலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடப்பதாலும், அதிக அளவிலான டேட்டா திட்டங்கள் மக்களிடையே பிரபலமாக உள்ளது.

புதிய நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா வழங்கும் பணிகள் தொடக்கம் – அமெரிக்க அரசு!

அந்த வகையில் Vi நிறுவனம் வருடம் முழுவதும் இணைய வசதி, கால்கள், வார இறுதி டேட்டா ரோல் ஓவர் மற்றும் ZEE5 போன்ற பல பலன்களுடன் உள்ள திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த திட்டங்களை, அவற்றின் பலன்களையும் காண்போம்.

VI யின் Rs.2,399 திட்டம்:

VI யின் Rs.2,399 திட்டம் மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, அனைத்து நெட்ஒர்க்களுக்கும் அன்லிமிட்டட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இதனுடன் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா உங்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன் வார இறுதி டேட்டா ரோல் ஓவர் மற்றும் ZEE5 க்கான பிரீமியம் அணுகல் மற்றும் Vi ™ திரைப்படங்கள் மற்றும் டிவிக்கு ஒரு வருடத்திற்கான இலவச சந்தாவை வழங்குகிறது.

VI யின் Rs.2595 திட்டம்.:

VI யின் Rs.2595 திட்டம் மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, அனைத்து நெட்ஒர்க்களுக்கும் அன்லிமிட்டட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபிக்கு ஒரு வருட சந்தா மற்றும் VI திரைப்படங்கள் மற்றும் டிவிக்கு இலவச சந்தாவை இந்த திட்டம் வழங்குகிறது. இதனுடன் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா உங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், வார இறுதி டேட்டா ரோல் ஓவர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here