விஜயின் ‘வேட்டைக்காரன்’ பட வில்லன் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி! திரையுலகினர் இரங்கல்!

0
விஜயின் 'வேட்டைக்காரன்' பட வில்லன் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி! திரையுலகினர் இரங்கல்!
விஜயின் 'வேட்டைக்காரன்' பட வில்லன் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி! திரையுலகினர் இரங்கல்!
விஜயின் ‘வேட்டைக்காரன்’ பட வில்லன் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி! திரையுலகினர் இரங்கல்!

தமிழ் திரையுலகில் கமல், விஜய் உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு வில்லனாக நடித்து புகழ்பெற்ற நடிகர் சலீம் கவுஸ் தற்போது மாரடைப்பால் காலமாகியுள்ளார். இவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் மரணம்

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த வில்லன் நடிகராக வலம் வந்தவர் சலீம் கவுஸ். சென்னையை சேர்ந்த நடிகர் சலீம் அகமது கவுஸ் கடந்த 1952ம் ஆண்டு பிறந்து, அங்குள்ள கிறிஸ்ட் சர்ச் பள்ளி மற்றும் பிரஸிடன்ஸி காலேஜில் படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் புனேயில், தொலைக்காட்சி மற்றும் சினிமா சார்ந்த படிப்பை முடித்த சலீம் அகமது ஒரு நடிகராக மக்கள் மத்தியில் அறிமுகமானது சின்னத்திரையில் தான். அந்த வகையில் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமான இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் தலை காட்டத்துவங்கினார்.

வெண்பாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் அடுத்த திருப்பம்!

குறிப்பாக பாலிவுட் சினிமாவில் கொடூர வில்லனாக வலம் வந்த நடிகர் சலீம் கவுஸை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தது ‘வெற்றி விழா’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு வில்லனாக நடித்திருந்தார் சலீம் கவுஸ். தொடர்ந்து இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வரவே சின்னக்கவுண்டர், மகுடம், செந்தமிழ் பாட்டு, தர்மசீலன், திருடா திருடா, சீமான், ரெட், தாஸ், சாணக்யா மற்றும் வேட்டைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து சிறந்த வில்லன் நடிகராக அறியப்பட்டார். இப்படி நடிகர் விஜயகாந்த் முதல் கமல், விஜய் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் இவர்.

Exams Daily Mobile App Download

நடிகை ஆண்ட்ரியாவுடன் இவரது நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘கா’ என்ற திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இப்படி இருக்க தற்போது 70 வயதான நடிகர் சலீம் கவுஸ் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அதாவது, நேற்று (ஏப்ரல்.27) இரவு இவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட, மும்பையில் உள்ள கோகிலா பென் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (ஏப்ரல்.28) காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அன்னாரது திடீர் மறைவுக்கு தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!