ரோஹித் மீது சந்தேகப்படும் வெண்பா, ஏத்திவிடும் வேலைக்காரி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த ட்விஸ்ட்!

0
ரோஹித் மீது சந்தேகப்படும் வெண்பா, ஏத்திவிடும் வேலைக்காரி - 'பாரதி கண்ணம்மா' அடுத்த ட்விஸ்ட்!
ரோஹித் மீது சந்தேகப்படும் வெண்பா, ஏத்திவிடும் வேலைக்காரி - 'பாரதி கண்ணம்மா' அடுத்த ட்விஸ்ட்!
ரோஹித் மீது சந்தேகப்படும் வெண்பா, ஏத்திவிடும் வேலைக்காரி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடரில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்வார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் தற்போது ரோஹித் மற்றும் வெண்பா கல்யாணத்தை நோக்கி கதை நகர்கிறது. இதனால் சீரியல் போரிங் ஆக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்த ட்விஸ்ட்:

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனலில் ஒன்று விஜய் டிவி. இந்த விஜய் டிவி சேனலில் 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் கருத்து வேறுபாடு காரணமாக 9 வருடங்களாக பிரிந்து உள்ளனர். மேலும் இவர்களின் குடும்பம் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கின்றனர். இருப்பினும் பாரதி, கண்ணம்மாவை விவாகரத்து செய்வதில் உறுதியாக உள்ளார்.

Exams Daily Mobile App Download

மறுபுறம் பாரதியை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்த பாரதியின் தோழி வெண்பாவிற்கு கடைசியில் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. ஏனென்றால் பாரதி, வெண்பாவை திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார். மேலும் வெண்பாவிற்கு திருமணம் செய்ய, ரோஹித் என்பவரை வெண்பாவிற்கு மாப்பிள்ளையாக தேர்வு செய்து, அவரை தன் வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார் வெண்பாவின் அம்மா. ரோஹித், பாரதிக்கும் வெண்பாவிற்கும் இருக்கும் காதலை ஏற்கனவே தெரிந்து கொண்டதால் வெண்பா அவனை வெறுத்து பேசினாலும் , அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவடைய மனதில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டுமென பல வேலைகளை பார்த்து வருகிறார்.

தமிழகத்தில் ரூ.1 லட்சம் நிதியுதவி – யார் யாருக்கு வழங்கப்படும்? அரசாணை வெளியீடு!

மேலும் ரோஹித் வெண்பாவின் பணத்திற்காக மட்டுமே இப்படி எல்லாம் நாடகமாடுகிறார் என சாந்திக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. இதனால் உடனே சாந்தி வெண்பாவிடம் சொல்லிவிட்டார். அப்போது ரோஹித் வெண்பாவிற்கு வைர நெக்லஸ் ஒன்று வாங்கிக்கொண்டு வருவார். மேலும் உஷாரான வெண்பா, ரோஹித் வாங்கிக்கொடுத்த வைர நெக்லஸை ஆசாரியரை வைத்து இது உண்மையான நகை தானா என சரி பார்க்கிறார் . திருட்டு முழி முழிக்கும் ரோஹித் வெண்பாவிடம் வசமாக சிக்கிக் கொண்டார். நெக்லஸை செக் செய்த ஆசாரி இது வைரம் தான் என்று சொல்லிவிட்டார்.சீரியலில் கடந்த சில நாட்களாகவே வெண்பாவிற்கு பல்பு கொடுப்பது போல் சீன்ஸ் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு சீரியலை எப்போதான் முடிப்பீங்க என்ற சலிப்பு வந்துவிட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here