வெண்பாவின் வளைகாப்பிற்கு வந்த ‘பாரதி கண்ணம்மா’ நட்சத்திரங்கள் – வைரல் வீடியோ!

0
வெண்பாவின் வளைகாப்பிற்கு வந்த 'பாரதி கண்ணம்மா' நட்சத்திரங்கள் - வைரல் வீடியோ!
வெண்பாவின் வளைகாப்பிற்கு வந்த 'பாரதி கண்ணம்மா' நட்சத்திரங்கள் - வைரல் வீடியோ!
வெண்பாவின் வளைகாப்பிற்கு வந்த ‘பாரதி கண்ணம்மா’ நட்சத்திரங்கள் – வைரல் வீடியோ!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஃபரீனா ஆசாத். அவர் தற்போது நிஜத்தில் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் அவரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வெண்பா வளைகாப்பு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் ராணி, சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRPயில் முதலிடத்தை பிடித்தது.

ஹேமா, அஞ்சலி & பாரதியுடன் சேர்ந்த வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நட்சத்திரங்கள்!

இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. ஆரம்பத்தில் புது யுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் நடித்தார். அதில் சிறிது பிரபலமானாலும் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான். அவருக்கு ரகுமான் என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தற்போது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.

நிச்சயத்திற்கு தயாராகும் பார்வதி, விவாகரத்து பத்திரத்தை பார்த்த சரவணன் – ராஜா ராணி 2 ப்ரோமோ!

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், நிஜத்தில் வெண்பாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத், கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிபிரியன், ஆரம்பத்தில் அகிலன் கேரக்டரில் நடித்த அகிலன் உள்ளிட்டோர் பரிசு கொடுத்து ஃபரீனாவை வாழ்த்தியதுடன், அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!