
வேலூர் & விருதுநகர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 – 85 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
வேலூர் & விருதுநகர் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 01.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | சென்னை கூட்டுறவு நிறுவனம் |
பணியின் பெயர் | உதவியாளர் |
பணியிடங்கள் | 85 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கூட்டுறவு நிறுவன காலிப்பணியிடங்கள்:
- வேலூர் – 40 பணியிடங்கள்
- விருதுநகர் – 45 பணியிடங்கள்
என மொத்தம் 85 பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக ஒருக்க வேண்டும் (அதாவது 0107:2005 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக ஒருக்க வேண்டும்). விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்று அதிகபட்சம் 32 முதல் 50 க்குள் இருக்க வேண்டும்.
கல்விதகுதி:
- ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree) (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி
- பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச் சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும் SSLC மேல் நிலைக் கல்வியும் (HSC) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
1. Written Exam
2. Interview
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.20,000/-
விண்ணப்பக் கட்டணம்
- விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/- ஆகும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. - விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் மற்றும் பழங்குடியினர் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சார் ஆட்சியரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் சென்னை கூட்டுறவு நிறுவனங்களின் இணையதளத்தில் உள்ள தொழில் வலைப்பக்கத்தில் உள்ள தற்போதைய தொடக்கப் பிரிவில் அதாவது தமிழ்நாடு மாவட்ட இணையதளங்களில் 10.11.2023 முதல் 01.12.2023 @ 05.45 PM வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.