ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலூர் மாவட்ட ஊர்க்காவல் படை காவலர் பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வேலூர் மாவட்ட மண்டல தளபதி அலுவலகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் வேலூர் மாவட்ட மண்டல தளபதி அலுவலகம் (ஊர்க்காவல் படை)
பணியின் பெயர் ஊர்க்காவல் படை காவலர்
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 7 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:
  • தற்போது வெளியான அறிவிப்பில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஊர்க்காவல் படை காவலர் பணிக்கு என மொத்தமாக 817 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 15 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.ஊர்க்காவல் படை காவலர் (ஆண்) – 09
  • ஊர்க்காவல் படை காவலர் (பெண்) – 06

கல்வி தகுதி:

ஊர்க்காவல் படை காவலர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு முடித்தவராகவும், சேவை செய்யும் குணம் உடையவராகவும் இருந்தால் போதுமானது ஆகும்.

பயிற்சி அளிக்கப்படும் நாட்கள்:

ஊர்க்காவல் படை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த நபர்களுக்கு பணி நியமனம் செய்யப்படும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப ஊர்க்காவல் படை விதிமுறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Ford India நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

தேர்வு செய்யும் விதம்:

ஊர்க்காவல் படை காவலர் பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான நாள் முதல் அடுத்து வரும் 7 நாட்களுக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் உள்ள வேலூர் மாவட்ட மண்டல தளபதி அலுவலகத்தில் தங்களது விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடம்:

மண்டல தளபதி (ஊர்க்காவல் படை),
தலைமை தபால் நிலையம் அருகில், அண்ணா சாலை,
வேலூர்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!