தமிழகத்தில் மீண்டும் உச்சத்தை எட்டும் காய்கறிகளின் விலை – மார்க்கெட் விலை விவரங்கள்!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காய்கறிகளின் விலையானது அதிகபட்சமாக உயர்ந்து வந்தது. காய்கறிகளின் விலை உயர்வு கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது.
காய்கறிகளின் விலை:
ஜூலை மாத இறுதி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வட மாநிலங்களில் பெய்து வந்த கனமழை காரணமாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவும் காய்கறிகளின் விலை அதிக அளவில் உயர தொடங்கியது. அதிகபட்சமாக தக்காளியின் விலையானது கிலோ ரூபாய் 200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.
Follow our Twitter Page for More Latest News Updates
தக்காளியை போன்று அனைத்து வித காய்கறிகளின் விலையும் உயர்ந்ததால் அரசு இதற்கான தீவிர நாடிவடிக்கைகளை மேற்கொண்டு காய்கறிகளின் விலைகளை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் துவங்கியுள்ளது. புரட்டாசி மாதத்தில் பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு முழுவதுமாக சைவ உணவுகளையே உண்பது வழக்கம். இதனால் தமிழகத்தில் திடீரென்று காய்கறிகளின் விலையானது மீண்டும் உயர தொடங்கியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையின் விலை நிலவரங்கள் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்.29 முதல் தமிழகத்தில் தொடங்கும் புதிய கணக்கெடுப்பு – அரசின் மாஸ் பிளான்!
அதன்படி பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 30, சின்ன வெங்காயம் ரூபாய் 70, பீட்ரூட் ரூபாய் 40, மிளகாய் ரூபாய் 40, உருளைக்கிழங்கு ரூபாய் 35, முருங்கைக்காய் ஒரு கிலோ 40, கத்தரிக்காய் ஒரு கிலோ 50, சுரைக்காய் ஒரு கிலோ 20, பட்டர் பீன்ஸ் 90 ரூபாய், பீன்ஸ் ஒரு கிலோ 60, இஞ்சி ஒரு கிலோ 250 என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகளின் விலை கிலோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. காய்கறிகளின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் இது குறித்து புலம்பத் தொடங்கியுள்ளனர்.