சிகிச்சை முடித்து வீடு திரும்பிய ‘வாவா சுரேஷ்’ – உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என பேட்டி!

0
சிகிச்சை முடித்து வீடு திரும்பிய 'வாவா சுரேஷ்' - உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என பேட்டி!
சிகிச்சை முடித்து வீடு திரும்பிய 'வாவா சுரேஷ்' - உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என பேட்டி!
சிகிச்சை முடித்து வீடு திரும்பிய ‘வாவா சுரேஷ்’ – உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என பேட்டி!

கேரளாவின் பிரபலமான பாம்புப்பிடி வீரர் வாவா சுரேஷ் சிகிச்சை முடித்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருக்கும் நிலையில், தனது உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என்று கூறியுள்ள செய்தி மக்களை நெகிழ்ச்சிக்குளாக்கி இருக்கிறது.

வாவா சுரேஷ் :

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற வழக்கச்சொல்லை நாம் கேட்டிருப்போம். ஆனால் பாம்புகளை பிடிப்பதை ஒரு சமூக சேவையாக செய்து வருபவர் கேரளாவை சேர்ந்த வாவா சுரேஷ். குடியிருப்பு பகுதிகளில் அத்துமீறி நுழையும் பாம்புகளை பிடிப்பதில் வல்லவரான இவர், இதுவரை 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்திருக்கிறார். இதில் ராஜ நாகம், நாகப்பாம்பு, நல்ல பாம்பு உள்ளிட்ட அதிக விஷத்தன்மையுள்ள பாம்புகளும் அடங்கும். இப்படி இருக்க சமீபத்தில் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ராஜ நாகத்தை பிடிப்பதற்காக சென்ற வாவா சுரேஷ், அந்த பாம்பினால் தீண்டப்பட்டார்.

மாநிலம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

உடனே சுயநினைவை இழந்து கோமாவிற்கு சென்ற வாவா சுரேஷ், கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் உடல்நலம் தேறி வர வேண்டும் என்று பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இவருக்காக பிரார்த்தனை செய்து வந்தனர். மறுபக்கத்தில் அறிவியல் முறைப்படி வாவா சுரேஷ் இந்த பாம்பை பிடிக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தது. இப்படிப்பட்ட சூழலில் சிகிச்சை முடித்து நேற்று (பிப்.7) இரவு வாவா சுரேஷ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி இருக்கிறார்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் அறிவிப்பு?

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வாவா சுரேஷ், ‘எனக்கு எதிராக சில வதந்திகள் பரப்பப்படுகின்றன. கடந்த 2006ம் ஆண்டில் வனத்துறை ஊழியர்களுக்கு பாம்பு பிடிக்க கற்றுகொடுத்தது நான் தான். அப்போது வனத்துறையில் பாம்பு பிடிப்பவர்கள் இல்லை. இன்று எனக்கு எதிராக விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் வனத்துறையில் உள்ள ஒரு அதிகாரி தான். அவர் தான் பாம்பு பிடிப்பதற்கு என்னை அழைக்க வேண்டாம் என்று சொல்லி மக்களை அச்சுறுத்தி வருகிறார். இருந்தாலும் என் உயிர் உள்ளவரை நான் பாம்புகளை பிடிப்பேன். இனி பாம்புகளை பிடிக்கும் போது கவனமான செயல்படுவேன்’ என்று பேசி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!