‘பாம்புப்பிடி’ மன்னன் வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றமா? மருத்துவரின் விளக்கம்!
கேரளாவில் 50 ஆயிரத்திற்கு அதிகமான பாம்புகளை பிடித்து சாதனை செய்த வாவா சுரேஷ் தற்போது ராஜ நாகம் தீண்டியதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை தற்போது தேறி இருப்பதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
வாவா சுரேஷ் உடல்நிலை:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் பெரிய பெரிய பாம்புகளை பிடித்து புகழ் பெற்றவர். இதுவரை அவர் 50 ஆயிரத்திற்கு அதிகமான பாம்புகளை பிடித்து இருக்கிறார். மேலும் அவரை 300 முறை பாம்புகள் கடித்து இருக்கிறது. அதில் இருந்து அவர் மீண்டு இருக்கிறார். இந்நிலையில் கோட்டயம் நகரில் ஒருவரது வீட்டில் ராஜ நாகம் ஒன்று புகுந்தது. அதை பிடிக்க வாவா சுரேஷ் வந்த நிலையில், அந்த பாம்பு எதிர்பாராத விதமாக அவரை தீண்டியது.
பிப். 14 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடக்கம் – மாநில அரசு உத்தரவு!
அந்த பாம்பு அவருடைய வலது முழங்காலில் கடித்து விட்டது. அதனால் அவர் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு கோட்டயம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை சேர்த்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். கொடிய விஷமுள்ள பாம்பு கடித்ததால் அவர் கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் பூரண குணமடைந்து வர வேண்டும் என பலர் பிராத்தனைகள் செய்தனர்.
பிப். 7ம் தேதி முதல் பள்ளி & கல்லூரிகள் முழு நேரம் இயங்க அனுமதி – முதல்வர் உத்தரவு!
தற்போது வாவா சுரேஷ் எப்படி இருக்கிறார் என கோட்டயம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெயக்குமார் கூறியதாவது, சுரேஷ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது எனவும், அவருக்கு பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியை அகற்றி விட்டோம். ஓரிரு நாளில் சாதாரண வார்டுக்கு மாற்றி விடுவோம். இதற்கு முன்பும் அவர் பல முறை பாம்பு கடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.