சந்திரகலா பற்றி முழுவதும் தெரிந்து கொண்ட வசுந்தரா – ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் ப்ரோமோ!

0
சந்திரகலா பற்றி முழுவதும் தெரிந்து கொண்ட வசுந்தரா - 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் ப்ரோமோ!
சந்திரகலா பற்றி முழுவதும் தெரிந்து கொண்ட வசுந்தரா - 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் ப்ரோமோ!
சந்திரகலா பற்றி முழுவதும் தெரிந்து கொண்ட வசுந்தரா – ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் ப்ரோமோ!

எப்படியாவது 12 ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என சரஸ்வதி சவால் விட்டிருந்த நிலையில் அந்த சவாலை சரஸ்வதி ஜெயித்துவிட்டார். தற்போது அனைத்து சூழ்ச்சிகளையும் செய்தது சந்திரகலா தான் என்கிற உண்மை வசுவிற்கு தெரியவரும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் சரஸ்வதி 12 ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் . தமிழ் பள்ளி படிப்பை கூட முடிக்காத காரணத்தினால் தமிழுக்கு படித்த பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோதை நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், தமிழும் படிக்காத சரஸ்வதியும் காதலித்தனர். சரஸ்வதியும் பன்னிரண்டாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என்பது கோதைக்கு தெரியவந்தால் கோதை கண்டிப்பாக இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவே மாட்டார்.

Exams Daily Mobile App Download

இதனால், சரஸ்வதி எம்பிஏ படித்து வருகிறார் என குடும்பத்தினர்கள் அனைவரிடமும் பொய் சொல்லி சரஸ்வதியை தமிழ் திருமணம் செய்து கொள்கிறார். திருமணமான உடனே சரஸ்வதி படிக்கவில்லை என்கிற விஷயம் கோதைக்கு தெரியவர தமிழும் தன்னை ஏமாற்றி விட்டாரே என கோதைக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. இதனால் பல மாதங்களாக சரஸ்வதியை கோதை தனது மருமகளாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது, சமையலறைக்குள் சரஸ்வதி வரக்கூடாது எனவும், பூஜை அறையில் சரஸ்வதி ஒருபோதும் விளக்கு போட கூடாது எனவும் பல நிபந்தனைகளை கூறியிருந்தார். பின்னர், நாளாக நாளாக சரஸ்வதியையும் கோதை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

தன்னால் குடும்பம் இரெண்டாகி விட்டதாக புலம்பும் கதிர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ட்விஸ்ட்!

பின்னர், குடும்பத்தினர்கள் அனைவரிடமும் நான் எப்படியாவது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றே தீருவேன் என சரஸ்வதி சவால் விட்டிருந்தார். கண்டிப்பாக சரஸ்வதி இந்த சவாலில் ஜெயிக்க விடவே கூடாது என சந்திரகலா சரஸ்வதிக்கு பவர் அதிகமான மாத்திரையை கொடுக்கிறார். ஆனால், சரஸ்வதி பவர் குறைவான மாத்திரையை சாப்பிட்டுவிட்டு தேர்வில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் சவாலிலும் வெற்றி பெற்றுவிட்டார். சந்திரகலா தான் அனைத்து சூழ்ச்சிகளையும் செய்தார் என்கிற உண்மை வசுவிற்கு தெரியவந்து சரஸ்வதியை கட்டி அணைப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here