விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வருண் – அடுத்த கட்டத்திற்கு நகரும் கதை!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வருண் - அடுத்த கட்டத்திற்கு நகரும் கதை!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வருண் – அடுத்த கட்டத்திற்கு நகரும் கதை!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கதை அடுத்த கட்டத்திற்கு எப்போது நகரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், வருண் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பல திருப்பங்கள் இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் எந்த உண்மையும் வெளியே வராமல் ரசிகர்கள் ஏமாந்து இருக்கின்றனர். பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழாமல் இருந்தாலும், ஹேமா பற்றிய உண்மை தெரிந்திருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை என்பதால் சுவாரசியம் குறைந்துள்ளது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ வருண் என்ட்ரி கொடுத்தால் மட்டுமே கதை மாறும்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

அதனால் இனி வரும் எபிசோடுகளில் வருண் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். வருண் பாரதியிடம் கண்ணம்மா பற்றிய உண்மையை சொல்ல கண்ணம்மா எந்த தவறும் செய்யவில்லை என நிரூபிக்க இருக்கிறார். அதனால் பாரதி கண்ணம்மாவை புரிந்துக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால் அதில் வெண்பா என்ன மாதிரி சதிவேலைகளை செய்ய இருக்கிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

விஜே முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா வரை – ஹேமாவின் சின்னத்திரை பயணம்! ரசிகர்கள் உற்சாகம்!

மேலும் துர்கா கதாபாத்திரம் வெளியே வந்தால் தான் கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை வெண்பா தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்ற உண்மை தெரியவரும். தற்போது வருண் வருவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் உண்மை எல்லாம் தெரிந்தால் சீரியல் விரைவில் முடிந்துவிடும் என்பதால் அப்படி நடக்க வாய்ப்பில்லை இது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான். அதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here