இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு காலியிடங்கள் – 65,500 வரை சம்பளம்! ஆகஸ்ட் 18 கடைசி நாள்!

0
இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு காலியிடங்கள் - 65,500 வரை சம்பளம்! ஆகஸ்ட் 18 கடைசி நாள்!
இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு காலியிடங்கள் - 65,500 வரை சம்பளம்! ஆகஸ்ட் 18 கடைசி நாள்!
இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு காலியிடங்கள் – 65,500 வரை சம்பளம்! ஆகஸ்ட் 18 கடைசி நாள்!

இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள காலிப் பணியிட விவரங்கள் அனைத்தும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை:

இந்து சமய அறநிலையத் துறை அவ்வப்போது காலியாக உள்ள பணியிட விவரங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் காலியாக உள்ள பணியிடம் குறித்தான விவரங்களை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்து மதத்தினை சார்ந்த தகுதியான நபர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாளம் பணி: 01 காலிப்பணியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.18,500 – 58,600 வரைக்கும் மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேத பாராயணம் பணி: 02 காலிப்பணியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.12,600 – 39,900 வரைக்கும் மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

உப கோயில் ஓதுவார் பணி: 01 காலியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.12,600 – 39,900 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பவருக்கு கண்டிப்பாக தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளிகளில் இருந்து மூன்றாண்டு படித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி பரிசாரகர் பணி – 04 காலியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.10,000 – 31,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கோயில்களில் நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தமிழக சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – ஐந்தருவியில் குளிக்க அனுமதி!

உதவி யானைப்பாகன் பணி – 01 காலியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.11,600 – 36,800 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கும் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யானைக்கு பயிற்சி அளித்து வழி நடத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணை இல்லக் காப்பாளர் பணி: 01 காலியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.15,900 – 50,400 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் பணி: 02 காலியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.10,000 – 31,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உதவியாளர்(சிவில்) பணி: 01 காலியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.20,600 – 65,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் துறையில் கட்டட பொறியியலில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரேட்டர் ஆப்ரேட்டர் பணி: 01 காலியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.16,600 – 52,400 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கட்டாயமாக மின் கம்பிப் பணியாளர்கள் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இந்திரத்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளம்பர் பணி : 01 காலியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.18,000 – 56,900 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிளம்பிங் பிரிவில் தொழிற்பயிற்சி படித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல்காரர் பணி: 01 காலியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.13,200 – 41,800 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி சமையல்காரர் பணி: 01 காலியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.11,600 – 36,800 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரித்து கொடுப்பதில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர் பணி: 01 காலியிடம், தகுதியானவர்களுக்கு ரூ.10,000 – 31,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு கட்டாயமாக தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது 01.07.2022 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விரும்பமும் தகுதியும் பெற்றவர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் சென்று ரூ.100 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பூர்த்திச் செய்து தேவையான நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 18 தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்தான விவரங்களை அறிய விரும்பினால் www.tnhrce.tn.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!