மீண்டும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் – ரசிகர்கள் உற்சாகம்!

0
மீண்டும் 'பிக் பாஸ்' அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் - ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் 'பிக் பாஸ்' அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் - ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியின் OTT படைப்பான ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக, ‘பிக் பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியின் வனிதா விஜயகுமார் கலந்து கொள்ள இருக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பிக் பாஸ் வனிதா

தமிழ் சின்னத்திரை உலகிற்கு முற்றிலும் பரிட்சயமில்லாத ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவியில் துவங்கப்பட்டது. வெவ்வேறு குணாதிசயம் கொண்ட சினிமா பிரபலங்களை ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்து போட்டிகளை நடத்தி, அதில் ஒருவர் மட்டுமே வெற்றியாளராக அறிவிப்பது தான் இந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சாராம்சம் ஆகும். இப்படிப்பட்ட மாறுபட்ட கருவுடன் தயாரிக்கப்பட்டு வரும் இந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி விஜய் டிவியில் சுமார் 5 எபிசோடுகளாக ஒளிபரப்பாகி இருக்கிறது.

“அம்மாவையும் என்னையும் ரொம்ப அசிங்கமா திட்டுறாங்க” விஜே அர்ச்சனா மகள் ஆதங்கம் – வைரலாகும் பதிவு!

அந்த வகையில் முதல் சீசனின் வெற்றியாளராக ஆரவ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து 2வது சீசனில் ரித்திகா, 3வது சீசனில் முகேன் ராவ், 4வது சீசனில் ஆரி, 5வது சீசனில் ராஜு என 5 பேர் ‘பிக் பாஸ்’ டைட்டிலை வென்றனர். இருப்பினும், ஒவ்வொரு முறையும் ‘பிக் பாஸ்’ ஷோவில் களம் கண்ட 18 முதல் 20 போட்டியாளர்கள் அனைவருமே மக்கள் மத்தியில் இருந்து எக்கச்சக்கமான வரவேற்புகளை பெற்றுள்ளனர். இதே போல ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்திருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவியின் OTT தலமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஒரு புதிய முயற்சியாக ‘பிக் பாஸ்’ அல்டிமேட் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை துவங்க இருக்கிறது. இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியானது, வழக்கமான பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்றது தான். இதில் இருக்கும் ஸ்வாரசியம் என்னவென்றால், இதுவரை நடைபெற்ற அனைத்து பிக் பாஸ் சீசனிலும் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் மறுபிரவேசம் செய்ய உள்ளனர்.

விரைவில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் களமிறங்கும் புகழ் – இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

இம்முறை 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில், போட்டியாளர்களின் விவரம் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல் போட்டியாளராக கவிஞர் சினேகன், ஜுலி ஆகியோருடன் 3வதாக வனிதா விஜயகுமார் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் கலந்து கொள்ள உள்ளார். இப்போது வனிதாவை ‘பிக் பாஸ்’ அல்டிமேட் போட்டியாளராக ரிவீல் செய்யும் ப்ரோமோ ஒன்று அதிரடியாக வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. ஏற்கனவே அடிதடிக்கும், சர்ச்சைக்கும் பெயர் போன வனிதா பிக் பாஸில் கலந்து கொண்டால் என்டர்டைன்மென்ட்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here