மீண்டும் விஜயகுமார் குடும்பத்தில் மிஸ் ஆன வனிதா – வைரலாகும் புகைப்படம்!!

0
மீண்டும் விஜயகுமார் குடும்பத்தில் மிஸ் ஆன வனிதா - வைரலாகும் புகைப்படம்!!
மீண்டும் விஜயகுமார் குடும்பத்தில் மிஸ் ஆன வனிதா - வைரலாகும் புகைப்படம்!!
மீண்டும் விஜயகுமார் குடும்பத்தில் மிஸ் ஆன வனிதா – வைரலாகும் புகைப்படம்!!

கடந்த வருடம் பல சர்ச்சைகளில் சிக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வனிதா. தற்போது அவரின் சொந்த அப்பாவான விஜயகுமார் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் பலரும் வனிதா அக்கா மிஸ்ஸிங் என்று வருத்தத்துடன் கமென்ட் செய்து வருகின்றனர்.

வனிதா விஜயகுமார்:

தமிழ் திரையுலகில் முன்னணி குணசித்திர நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகுமார். இவர் 80களில் இருந்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருபவர். நாட்டாமை என்றாலே நம் மனதிற்கு முதலில் நியாபகத்திற்கு வருவது விஜயகுமார் தான். வில்லன் கதாபாத்திரமும் சரி, அப்பாவி கதாபாத்திரமும் சரி அனைத்துமே இவருக்கு பக்காவாக ஒத்து போகும். அதனாலேயே இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

தமிழ் எல்லாம் பத்தாதுன்னு ஹிந்தியில் இறங்கிட்டீங்களா?? சித்தி சீரியல் நடிகையின் புதிய அவதாரம்!!

நிறைய படங்களில் இவரை பார்க்காமல் இருப்பது தான் அரிதான ஒன்று. எதாவது ஒரு சிறு கதாபாத்திரத்தில் கூட நடித்து விடுவார். இந்நிலையில் சில வருடங்களாக அவருக்கும் அவரது முதல் மகளான வனிதாவிற்கும் தொடர்ந்து பல சண்டைகள் நடந்து வந்தது. அதுவும் அவரது மகன் ஸ்ரீஹரியை வைத்து தான் பெரும்பாலும் சண்டைகள் நடந்தது. அதன் பிறகு அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது.

TN Job “FB  Group” Join Now

ssc

இதில் உச்சக்கட்டமே வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டது தான். ஆனால் இந்த தடவை பிரச்சனை விஜயகுமாருக்கும், வனிதாவுக்கு அல்ல. சோசியல் மீடியாவிற்கும், வனிதாவிற்கும் தான். ஆனால் இந்த தடவை விஜயகுமார் குடும்பம் கொஞ்சம் கூட வாய் திறக்கவில்லை. மேலும் தங்கள் குடும்பம் என்று வழக்கம் போல தான் இருந்தனர். இதனால் அவர்கள் வெளியிடும் அனைத்து புகைப்படங்களிலும் வனிதா மிஸ்ஸிங் என அவரது ரசிகர்கள் கமன்ட் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் அவர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!