‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய வனிதா – ரசிகர்கள் ஷாக்!

0
'பிக் பாஸ்' அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய வனிதா - ரசிகர்கள் ஷாக்!
'பிக் பாஸ்' அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய வனிதா - ரசிகர்கள் ஷாக்!
‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய வனிதா – ரசிகர்கள் ஷாக்!

டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் கடந்த மாதம் முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் வனிதா திடீரென வெளியேறியதாக வெளிவந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிக்பாஸ் வனிதா

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் துவங்கப்பட்ட ‘பிக்பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தள்த்தில் இதுவரை 23 எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஸ்வாரசியம் என்னவென்றால் இதனை ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் கண்டு களிக்கலாம் என்பது தான். அந்த வகையில் இதுவரை நடைபெற்ற ‘பிக்பாஸ்’ சீசன்களில் கலந்து கொண்ட 14 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போதைய ‘பிக்பாஸ்’ அல்டிமேட் ஷோவில் போட்டிக்களம் கண்டு வருகின்றனர்.

காதலுக்கு மரியாதை, அலைபாயுதே புகழ் மலையாள நடிகை லலிதா மரணம் – பிரபலங்கள் இரங்கல்!

ஒவ்வொரு நாளும் ஸ்வாரசியமான மற்றும் விறுவிறுப்பான போட்டிகளுடன் களம் கண்டு வரும் ‘பிக்பாஸ்’ அல்டிமேட் ஷோவில் இருந்து இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த ‘பிக்பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்து வந்த நடிகர் கமல்ஹாசன் இனி இந்த ஷோவில் தொடர போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். அதாவது, நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், அவர் ‘பிக்பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – சேரப்போகும் பாரதி, கண்ணம்மா & ஹேமா!

என்றாலும் அவர் ‘பிக் பாஸ்’ சீசன் 6ல் கலந்து கொள்வார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்கிடையில் ‘பிக்பாஸ்’ அல்டிமேட் ஷோவை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகவும் சில செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில் ‘பிக்பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த போட்டியாளர் வனிதா திடீரென இந்த ஷோவில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளர்களில் ஒருவரான வனிதா இதில் இருந்து வெளியேறி இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!