4 இல்ல 400 கல்யாணம் கூட பண்ணிப்பேன் – நடிகை வனிதா அதிரடி பேச்சு!

0
4 இல்ல 400 கல்யாணம் கூட பண்ணிப்பேன் - நடிகை வனிதா அதிரடி பேச்சு!
4 இல்ல 400 கல்யாணம் கூட பண்ணிப்பேன் - நடிகை வனிதா அதிரடி பேச்சு!
4 இல்ல 400 கல்யாணம் கூட பண்ணிப்பேன் – நடிகை வனிதா அதிரடி பேச்சு!

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அடுத்தடுத்து சர்ச்சையான விஷயங்களை செய்து வரும் நடிகை வனிதா, தற்போது புதிய சர்ச்சையை கிளப்பும் வகையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சர்ச்சை நாயகி:

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் நடிகையான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஜோடியினரின் மூத்த மகள் வனிதா தனது 16வது வயதில் நடிகர் விஜயுடன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு, 5,6 படங்கள் நடித்து விட்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து செட்டிலாகி விட்டார். இருவரும் குடும்ப பிரச்சனையின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன்பின் 2ம் முறை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆனார். சில வருடங்களில் அந்த திருமணமும் முடிவிற்கு வந்தது.

வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் விஜய் டிவி நடிகை ஸ்ரேயா அஞ்சன் – ரசிகர்கள் வாழ்த்து!

வனிதாவிற்கு திரையுலகில் மீண்டும் ஒரு ரீ என்ட்ரி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அங்கு வனிதா வாயை திறந்தாலே பஞ்சாயத்து தான் என்ற வகையில் நடந்து கொண்டார். அடுத்தவர் கருத்துக்கள் அனைத்தையும் தவறு என்று வாதாடும் குணம் கொண்டவர் வனிதா. வனிதாவின் சண்டையினால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி உச்சத்தை தொட்டது என்று சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் பல வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. அதனுடன் சேர்த்து பல சர்ச்சைகளிலும் சிக்கினார். இவர் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து வெளியிட்ட போட்டோக்கள் அனைத்தும் ட்ரெண்டிங் ரகம்.

‘பாக்கியலட்சுமி’ ரேஷ்மாவின் சிங்கிள் மதர் ஸ்டோரி – திருமண தோல்வி டூ சீரியல் வெற்றி!

ஆனால் சில மாதங்களிலேயே அந்த திருமணம் முடிவிற்கு வந்து ஊடகங்களில் பல தரப்பட்ட கருத்துக்களுக்கு ஆளானது. இதனால் வனிதா என்றாலே சர்ச்சை தான் என்று ஊடகங்களில் பதிவாகி விட்டது. இந்நிலையில், சமீபத்தில் பவர் ஸ்டாருடன் ஷூட்டிங்கில் திருமண கோலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து அடுத்த படியான விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில், தற்போது வனிதா தனது இன்ஸ்டாகிராமில் மஞ்சள் கயிறுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் இவரை ரசிகர்கள் நான்காவது கல்யாணமா? என்று கலாய்த்து உள்ளனர். அதற்கு வனிதா, ‘நான் 4 திருமணம் செய்து கொள்வேன் அல்லது 400 திருமணம் செய்து கொள்வேன், உங்களுக்கு என்ன?’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!