கழுத்தில் தாலியுடன் வனிதா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் விமர்சனம்!

0
கழுத்தில் தாலியுடன் வனிதா வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் விமர்சனம்!
கழுத்தில் தாலியுடன் வனிதா வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் விமர்சனம்!
கழுத்தில் தாலியுடன் வனிதா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் விமர்சனம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் வனிதா. பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து புதிதாக தாலி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சர்ச்சையில் வனிதா:

வனிதா விஜயகுமார், நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள். விஜயின் சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது சர்ச்சை என்ற வார்த்தைக்கு வனிதா என்று பொருள் கூறும் அளவிற்கு தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக ரூம் மேட்களுடன் காரசாரமான மோதலில் ஈடுபடுவது இருக்கு பொழுதுபோக்காக இருந்து வந்தது.

ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான அட்டவணை மாற்றம் – பிசிசிஐ அறிவிப்பு

அவரது திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என அவரது திருமண எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இவரது மூன்றாவது திருமணம் பீட்டர் பால் உடன் நடந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக அமைந்தது. நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வந்தனர். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றார். அதன் பின் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1000 ரூபாய் பரிசுத்தொகை – முதல்வர் அறிவிப்பு!

இவ்வாறு ஸ்மூத் ஆக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றிக் கொள்கிற புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது 4வது கல்யாணம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில் நான் 4 கல்யாணம் இல்லை 40 கல்யாணம் கூட பண்ணிக்குவேன், உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு பதிலடி கொடுத்தார் வனிதா. அதனை தொடர்ந்து தற்போது புது மஞ்சள் தாலி கயிருடன் இருக்கிற ஒரு செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது எத்தனையாவது திருமணம், கல்யாணம் தான் உங்கள் பொழுதுபோக்கா, எத்தனை முறை கல்யாணம் பண்ணுவீங்க, ஏன் மேடம் உங்களுக்கு போர் அடிக்கலையா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!