யாஷிகா ஆனந்திற்கு வனிதா கொடுத்த அட்வைஸ் – சமூக வலைதள பதிவு!

0
யாஷிகா ஆனந்திற்கு வனிதா கொடுத்த அட்வைஸ் - சமூக வலைதள பதிவு!
யாஷிகா ஆனந்திற்கு வனிதா கொடுத்த அட்வைஸ் - சமூக வலைதள பதிவு!
யாஷிகா ஆனந்திற்கு வனிதா கொடுத்த அட்வைஸ் – சமூக வலைதள பதிவு!

கடந்த சில வாரங்களுக்கு முன் மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளானது. அதில் அவர் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அது குறித்து யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கத்தில் குற்ற உணர்ச்சியுடன் பதிவிட்டு உள்ளார். அதற்கு வனிதா விஜயகுமார் பதில் கமெண்ட் செய்துள்ளார்.

யாஷிகா ஆனந்த்:

கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி யாஷிகா ஆனந்த் மாமல்லபுரம் அருகே தனது 2 ஆண் நண்பர்கள் மற்றும் தோழி வள்ளிசெட்டி பவானியுடன் காரில் அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் போது, கார் யாஷிகாவின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை நடுவே இருந்த தடுப்பு சுவற்றில் மோதி உருண்டது. அதில் சம்பவ இடத்திலேயே யாஷிகாவின் தோழி பவானி உயிரிழந்தார். யாஷிகா அதிக காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மற்ற இரண்டு நண்பர்களும் இலேசான காயங்களுடன் தப்பினர்.

தமிழகத்தில் ‘வீடு தேடி வரும் சத்துணவு’ திட்டம் – அரசின் புதிய முயற்சி!

யாஷிகாவிற்கு இடுப்பு பகுதியில் பயங்கர அடிபட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்ட அவர் தனது சமூக வலைத்தளத்தில் தோழி குறித்த உருக்கமாக பதிவிட்டார். மேலும், அவர் குடித்து வாகனம் ஓட்டியதால் தான் அவரது தோழி இறந்தார் என அவதூறு பரப்புவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தனது தோழியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு, வாழ்நாள் முழுவதும் அந்த குற்றவுணர்ச்சி எனக்கு இருக்கும். அவரது உயிர் தோழியை பிரிந்து வாடும் தோழியின் குடும்பத்திற்கு இழப்பை கடந்து வர சக்தியை வழங்க இறைவனிடம் வேண்டி கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் தனக்கு வாழவே விருப்பம் இல்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவில் கமெண்ட் செய்த நடிகை வனிதா விஜயகுமார், யாஷிகா ஆனந்திற்கு அட்வைஸ் செய்துள்ளார். அதில் டார்லிங் இது யாருக்கு வேண்டுமானலும் நடக்கும். அதனால் தான் அது விபத்து, பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது. யாராலும் மாற்ற முடியாது. நீயும் பாதிக்கப்பட்டவள் தான். உன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றிற்காக உன்னையே நீ குற்றம் சொல்லிக் கொள்வதை முதலில் நிறுத்து, யார் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதே, நீ தெளிவாக இரு, ஓய்வெடு, உடல் நலனைப் பார்த்துக் கொள், இந்த கோரமான விபத்தில் நீ உயிர் பிழைத்ததற்கு காரணம் இருக்கும், கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!