பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய வனிதாவின் முதல் பதிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய வனிதாவின் முதல் பதிவு - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய வனிதாவின் முதல் பதிவு - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய வனிதாவின் முதல் பதிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள வனிதா தற்போது தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரவளித்தாலும், ஒரு பக்கம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வனிதாவின் பதிவு:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி மற்றும் அதன் வரவேற்பை தொடர்ந்து மக்கள் நிகழ்ச்சியினை பற்றி முழுவதுமாக மக்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி OTT தளத்தில் ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. 24 மணி நேரமும் நிகழ்ச்சி OTT தளத்தில் வரும். அதை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், முக்கியமான விஷயமாக இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் இதில் கலந்து கொள்கிறார்கள்.

‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா சந்திக்கப்போகும் சவால்கள்? ஷாக்கிங் ப்ரோமோ!

வனிதா கடந்த முறை பல முறை மீண்டும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்தார். இந்த முறை ஆரம்பத்தில் இருந்து சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட வனிதா சண்டை போட்டு வந்தார். காபி போன்ற விஷயங்களுக்காக வனிதா அழுதது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதேபோல், இந்த வாரத்தின் கேப்டன்சி டாஸ்க் நடந்த போது வனிதா வேண்டுமென்று கண் கட்டு சரியாக இல்லாமல் இருப்பதாய் மறைத்துள்ளார் என்று பலரும் குற்றம் சாட்டினார்கள்.

இதற்கெல்லாம் அசராத வனிதா, ஒரு சின்ன விஷயத்தில் மீண்டும் சண்டை போட்டு அழுது, நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக பிக் பாஸிடம் கூறினார். இதனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா தன் மூத்த மகள் ஜோவிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதனுடன் தான் தனக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here