சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர் – ரசிகர்கள் ஷாக்!

0
சன் டிவி 'வானத்தை போல' சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர் - ரசிகர்கள் ஷாக்!
சன் டிவி 'வானத்தை போல' சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர் - ரசிகர்கள் ஷாக்!
சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர் – ரசிகர்கள் ஷாக்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘வானத்தை போல’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் சின்ராசு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் தமன் இந்த சீரியலை விட்டு வெளியேறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

நடிகர் விலகல்

தமிழ் டிவி சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 300 எபிசோடுகளை கடந்து படு ஹிட்டாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘வானத்தை போல’. இந்த தொடர் அண்ணன், தங்கை உறவை மையமாக வைத்து நகர்ந்து வருகிறது. இந்த சீரியல் ஒளிபரப்பான காலம் துவங்கி இப்போது வரை மக்களின் ஏக போக ஆதரவை பெற்று வருகிறது.

TNUSRB காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு – சமூக வலைதளம் ஆய்வு!

குறிப்பாக சமீபத்தில் துளசி என்ற தங்கை கதாப்பாத்திரத்திற்கு திருமணம் நடைபெறுவது போல வெளியான எபிசோடுகள் எல்லாம் எக்கச்சக்கமான பார்வையாளர்களின் கவனம் ஈர்த்திருந்தது. இதை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு அண்ணன் சின்ராசு மற்றும் தங்கை துளசிக்கு இடையில் ஏற்படும் சில பிரிவுகள் மற்றும் பாசப் பிணைப்புகளை வைத்து கதைக்களம் நகர்ந்து வர, இத்தொடரில் துளசியாக நடித்து வந்த நடிகை ஸ்வேதா இந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – பூர்வாங்க பணிகள் துவக்கம்!

இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் கடந்த வாரம் முதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், துளசி என்ற கதாப்பாத்திரத்தில் தற்போது வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார். இப்படி இருக்க ‘வானத்தை போல’ சீரியலில் சின்ராசு என்ற அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் தமன் இந்த சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே துளசியின் கதாப்பாத்திரத்தில் ஒன்றி இருந்த ஸ்வேதா சீரியலை விட்டு விலகி இருக்கும் நிலையில், இப்போது நடிகை தமனும் சீரியலில் இருந்து விலகுவதாக வெளியான செய்தி ரசிகர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!