நடிகர் அஜித் நடித்த “வலிமை” பட பாடல் – இன்று இரவு 9 மணிக்கு வெளியீடு!!

0
நடிகர் அஜித் நடித்த
நடிகர் அஜித் நடித்த "வலிமை" பட பாடல் - இன்று இரவு 9 மணிக்கு வெளியீடு!!
நடிகர் அஜித் நடித்த “வலிமை” பட பாடல் – இன்று இரவு 9 மணிக்கு வெளியீடு!!

நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் இன்றிரவு 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை பட பாடல்:

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் காம்பினேஷனில் வலிமை படம் உருவாகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றி வருகிறார்.

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – புதிய அப்டேட்! இனி கவலையில்லை!

இந்த படத்தின் பூஜை 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையாமல் பல மாதங்களாக நீண்டு கொண்டே சென்றது. இதனால் ரசிகர்களை இனியும் காக்க வைக்க வேண்டாம் என அஜித்தின் 50 வது பிறந்தநாளான மே 1ம் தேதியன்று வலிமை ஃபஸ்ட்லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் அப்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் உச்ச நிலையில் இருந்த காரணத்தால் மக்கள் துன்பத்தில் இருக்கும் சமயத்தில் கொண்டாட்டம் வேண்டாம் என அஜித் தெரிவித்ததால் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரிதும் விருந்தாக இருந்தது.

இந்நிலையில், வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் இன்றிரவு 9 மணிக்கு பின் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் தல ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். யுவன் பாடல்கள் என்றாலே தனி மாஸ் இருக்கும் என்ற நிலையில் வெளியாக உள்ள பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!