நடிகர் அஜித்தின் “வலிமை” படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம்!

0
நடிகர் அஜித்தின்
நடிகர் அஜித்தின் "வலிமை" படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம்!
நடிகர் அஜித்தின் “வலிமை” படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித் நடித்து இன்று வெளியாகி இருக்கும் “வலிமை” படம் குறித்து ரசிகர்கள் என்ன விமர்சனம் செய்கிறார்கள் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வலிமை படம்:

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜித்தின் படம் எதுவும் 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் கொரோனா பரவல் காரணமாக வெளியாக தாமதம் ஏற்பட்டது. பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் அலை கொரோனா தாக்கம் காரணமாக இறுதிகட்ட பணிகளும் பாதிக்கப்பட்டது

சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

அதனால் படம் தாமதமாக வெளியானது. அஜித் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளை வெளியிட்டனர். அதனால் வலிமை அப்டேட் என்ற ஹாஸ்டெக் ட்ரெண்ட் ஆனது. இன்று முதல் நாள் முதல் ஷோ பார்த்த அஜித் ரசிகர்கள் படம் குறித்த விமர்சனங்களை பற்றி சொல்லி இருக்கிறார்கள். அதன் படி படம் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளதாக சொல்லி இருக்கின்றனர். இந்த படத்தின் கதையை ஹாலிவுட் படம் அளவிற்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.

அமிர்தாவை பாட்டு பாட வைக்கும் எழில், இனியாவை அடித்த பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை அஜித் தான் இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு பின் அஜித்தை பார்க்கும் ரசிகர்களுக்கு பிட்டாக படத்தில் வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். படத்தின் முதல் பாதி, சண்டைக்காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் ஸ்டைல், டெக்னிக்கல் ஒர்க் ஆகியவை தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இந்த படம் 2 ஆண்டுகளாக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!