நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்பட ரிலீஸ் தேதி – அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!

0
நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்பட ரிலீஸ் தேதி - அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்பட ரிலீஸ் தேதி - அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்பட ரிலீஸ் தேதி – அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்பட வெளியீடு கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளித்ததால், வலிமை திரைப்பட இயக்குனர் போனி கபூர், வலிமை திரைப்படம் வெளியாகும் தேதியை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் அறிந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

வலிமை திரைப்படம்:

இந்தியா முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் இருந்து மீண்டும் ஊரடங்குகள் கடமையாக்கப்பட்டது. மேலும் இரவு ஊரடங்குகள், வார இறுதி நாள் முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இந்த வகையில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள், பூங்காங்கள் என பொது இடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு ஜனவரி 13ம் தேதி வர இருந்த வலிமை திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

‘பிக் பாஸ்’ தாமரைக்காக வருண் செய்த மறக்க முடியாத செயல் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இந்த தகவல் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனால் ஏப்ரலில் வெளியாகும் ‘பீஸ்ட்’டுக்கு முன்னால் ’வலிமை’ படத்தை மார்ச் மாதம் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார்.

Bigg Boss Ultimate Promo – வனிதா & சுரேஷ் சர்க்கரவர்த்திக்கு இடையில் முற்றிய வாக்குவாதம்! சினேகன் வெளிநடப்பு!

இந்நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளித்துள்ளதால் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ‘வலிமை’ படம் திரைக்கு வருகிறது. இதுகுறித்த தன் பதிவில் போனி கபூர், “வார்த்தைகளை விட செயல்களே அதிகம் பேசும். படத்துக்கான காத்திருப்பு தற்போது நிஜமாகவே முடிவுக்கு வந்துவிட்டது. வலிமையின் அனுபவத்தை, பிப்ரவரி 24ம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் பெறுங்கள்” என தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here