அஜித்தின் ‘வலிமை’ 2022 பொங்கலுக்கு ரிலீஸ் – போனிகபூர் அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
அஜித்தின் 'வலிமை' 2022 பொங்கலுக்கு ரிலீஸ் - போனிகபூர் அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்!
அஜித்தின் 'வலிமை' 2022 பொங்கலுக்கு ரிலீஸ் - போனிகபூர் அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்!
அஜித்தின் ‘வலிமை’ 2022 பொங்கலுக்கு ரிலீஸ் – போனிகபூர் அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்!

தல அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வலிமை திரைப்படம்:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். ரசிகர் மன்றம் இல்லாமல் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் இவர். தமிழில் நடிகர் அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடிக்கிறார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்று வரும் இந்த திரைப்படமானது 2 வருடங்களாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் லட்சுமி அம்மா? கண்ணனை பார்க்காத வருத்தம்!

போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வலிமை திரைப்படம் வெளியாகும் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

கண்ணம்மாவுடன் மீண்டும் இணைந்த பாரதி, ரசிகர்கள் உற்சாகம் – வெளியான புகைப்படம்!

தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் 2022-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ‘வலிமை’ திரைக்கு வரும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நாளை படத்தில் இருந்து சின்ன வீடியோ துணுக்கு வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திகேயா, யோகி பாபு, புகழ் நடித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிரைலர் வெளியிடப்படும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!