நடிகர் அஜித் ‘வலிமை’ பட அப்டேட் – டீஸர், பட ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

0
நடிகர் அஜித் 'வலிமை' பட அப்டேட் - டீஸர், பட ரிலீஸ் தேதி குறித்த தகவல்!
நடிகர் அஜித் 'வலிமை' பட அப்டேட் - டீஸர், பட ரிலீஸ் தேதி குறித்த தகவல்!
நடிகர் அஜித் ‘வலிமை’ பட அப்டேட் – டீஸர், பட ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

தமிழில் முன்னணி நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் புதிய அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கூடிய விரைவில் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை :

தமிழில் நடிகர் அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் படத்தில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு படப்பிடிப்பு தொடங்கி முடிவடைந்துள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு திடீரென விலகும் வெண்பா? ரசிகர்கள் ஷாக்!

அண்மையில் வலிமை பட குழுவினர் ரஷ்யாவின் மாஸ்கோவில் படப்பிடிப்பை முடித்து விட்டு தமிழகம் திரும்பினார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் பெற்றுள்ளார். இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீஸர் அடுத்த வாரம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டிக்டாக் பிரபலம் திவ்யா திடீர் கைது – போலீசார் அதிரடி!

மேலும் படத்தின் டீஸருடன் ரிலீஸ் தேதி இல்லாமல் மாதத்தை மட்டும் அறிவிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 25 கிறிஸ்துமசை முன்னிட்டு படத்தை வெளியிடலாமா என்று பட குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் டீசர் ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!