‘வலிமை’ கொண்டாட்டத்திற்காக பால் பாக்கெட்டுகளை திருடிய அஜித் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

0
'வலிமை' கொண்டாட்டத்திற்காக பால் பாக்கெட்டுகளை திருடிய அஜித் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!
'வலிமை' கொண்டாட்டத்திற்காக பால் பாக்கெட்டுகளை திருடிய அஜித் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!
‘வலிமை’ கொண்டாட்டத்திற்காக பால் பாக்கெட்டுகளை திருடிய அஜித் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் அஜித்தின் “வலிமை” படம் இன்று வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் சமூக விரோதிகள் சமூக சீர்கேடு விஷயங்களை செய்வது போல வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

வலிமை படம்:

நடிகர் அஜித் அவர்களின் ரசிகர்களுக்கு விருந்தாக இரண்டு ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின் போனி கபூர் தயாரிப்பில் “வலிமை” படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஹாலிவுட் ரேஞ்சிற்கு மாஸ் காட்டி இருக்கும் இந்த படத்தை பார்க்க ஏகப்பட்ட தல ரசிகர்கள் திரையரங்கு வாசலில்அதிகாலை முதல் காத்திருந்தனர். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய H.வினோத் இயக்கத்திலேயே இந்த படமும் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணம்மாவுடன் சேர்ந்த பாரதி!

இன்று முதல் ஷோ பார்த்தது முதல் பல இடங்களில் பாசிட்டிவ் கமெண்ட்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். அந்த அளவிற்கு இயக்குனர் மிரட்டி இருக்கிறார். மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து வந்தாலும் அஜித் தனது ரசிகர்களை ஏமாற்றாமல் தன்னுடைய புது கெட்டப்பில் கலக்கி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேளம்-தாளம், பாட்டு, நடனம் என கொண்டாடுகிறார்கள் அந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் களமிறங்கிய புது முல்லை – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் அஜித் ரசிகன் என சொல்லி ஒரு சிலர் சில அவதூறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது படம் பார்க்க அதிகாலை முதல் தியேட்டர் வாசலில் காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அப்போது வந்த பால் வண்டியை நிறுத்தி பால் பாக்கெட்டுகளை திருடி இருக்கின்றனர். அது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் போனி கபூர் காரில் தயிரை ஊற்றி அவருக்கு நன்றி சொல்கிறேன் என்ற பெயரில் தேவை இல்லாத செயல்களை செய்து சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். அந்த வீடியோவும் ட்ரெண்டாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here