விஜய் டிவியில் திடீரென நிறுத்தப்பட்ட ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் – நடிகை சரண்யா விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவியில் திடீரென நிறுத்தப்பட்ட 'வைதேகி காத்திருந்தாள்' சீரியல் - நடிகை சரண்யா விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் திடீரென நிறுத்தப்பட்ட 'வைதேகி காத்திருந்தாள்' சீரியல் - நடிகை சரண்யா விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் திடீரென நிறுத்தப்பட்ட ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் – நடிகை சரண்யா விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் வெறும் 37 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் கடந்த 4ம் தேதியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அந்த சீரியலில் நடித்திருந்த நடிகை சரண்யா விளக்கம் கொடுத்துள்ள பதிவு ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைதேகி காத்திருந்தாள்

சமீப காலமாக விஜய் டிவியில் சீரியல் நடிகர், நடிகைகளின் ரீபிளேஸ்மென்ட் என்பது எதிர்பாராத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. வழக்கமாக ஒரு சீரியல் என்று எடுத்துக்கொண்டால் அதற்கேற்ற வரவேற்புகளை கருத்தில் கொண்டு 3 அல்லது 4 ஆண்டுகள் வரைக்கும் ஒளிபரப்பு செய்யப்படும். அப்படி சில ஆண்டு காலம் ஒளிபரப்பாகும் சீரியலின் ஆரம்பத்தில் இருந்து நடிப்பவர்கள், திடீரென மாறும் போது ரசிகர்கள் வருத்தமடைவது உண்டு. அப்படி தான் விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் இருந்து பலர் விலகி கொண்டே வர ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கிறது.

விஜய் டிவி விஜே மணிமேகலைக்கு இவ்வளவு சொத்துக்களா? ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்!

இப்படி, விஜய் டிவி சீரியல்களில் இருந்து விலகும் பட்டியல், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ரக்ஷிதா, ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி, அகிலன், ஸ்வீட்டி, ‘காற்றுக்கென வேலி’ தர்ஷன், ‘வைதேகி காத்திருந்தாள்’ ப்ரஜன் வரையும் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்கள் அனைவரும் அந்தந்த சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தவர்கள் தான். இந்த வரிசையில் விஜய் டிவியில் கடந்த ஒரு மாதம் மட்டும், கிட்டத்தட்ட 37 எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் தற்போது இடை நிறுத்தப்பட்டிருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த சீரியலில் இருந்து நடிகர் ப்ரஜன் விலகி இருந்த நிலையில், இவருக்கு பதிலாக ‘ராஜபார்வை’ சீரியல் பிரபலம் நடிகர் முன்னா லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். இவர் அறிமுகமாகி ஒரு சில எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான நிலையில், ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் ப்ரஜன் கூறும் போது, நாம் எதுவும் பழிவாங்க தேவையில்லை. கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று குறிப்பிட்டிருந்தார்.

சிகிச்சை முடித்து வீடு திரும்பிய ‘வாவா சுரேஷ்’ – உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என பேட்டி!

அதே போல ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியலில் நடித்து வந்த நடிகை சரண்யா, ‘எல்லாவற்றுக்கும் காரணம் கர்மா தான். உழைப்பை அசிங்கப்படுத்தும் போது தான் கஷ்டமாக இருக்கிறது. இப்போது மிகவும் கஷ்டமான காலத்தை சந்தித்து வருகிறேன். விரைவில் இன்னும் பலத்துடன் மீண்டு வருவேன். இந்த காலத்தில் என்னுடன் நின்ற எல்லாருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார். அதே போல தான் நடிகர் முன்னாவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இப்போது இந்த சீரியல் நிறுத்தப்பட்டதற்கான காரணம் எதுவென்ற தகவல் இன்னும் உறுதியாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here