வடிவேல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் – ‘சிரிச்சா போச்சு’ குழு நேரில் அஞ்சலி!

0
வடிவேல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் - 'சிரிச்சா போச்சு' குழு நேரில் அஞ்சலி!
வடிவேல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் - 'சிரிச்சா போச்சு' குழு நேரில் அஞ்சலி!
வடிவேல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் – ‘சிரிச்சா போச்சு’ குழு நேரில் அஞ்சலி!

விஜய் டிவி புகழ் வடிவேல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து சிரிச்சாப் போச்சு குழுவினர் நேற்று கல்லறைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வடிவேல் பாலாஜி:

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அவரது நடை, உடை, பாவனை போன்ற அனைத்தும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை போலவே இருக்கும். இதனாலேயே அவர் தனித்து அறியப்பட்டார். அந்த சீசனில் அவர் டைட்டில் வெல்லவில்லை என்றாலும், நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதன் பின்னர், சிரிச்சா போச்சு, கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சில திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.

‘ஹேமா கண்ணம்மாவின் குழந்தை தான்’ உண்மையை கூறிய ஆட்டோ அண்ணா – அடுத்த திருப்பம்!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய ‘அது இது எது’ நிகழ்ச்சியில் ஒரு பகுதி தான் சிரிச்சா போச்சு. பிரபலங்களை சிரிக்க வைப்பதற்கான பகுதி அது. எவ்வளவு சீரியசான நடிகர்களும் வடிவேல் பாலாஜியின் பேச்சில் சிரித்து விடுவார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார் பாலாஜி. பல பிரபலங்களுக்கும் மிகவும் பிடிக்க தொடங்கி விட்டது. தனி ஒரு ஆளாக இருந்து எவ்வளவு ரசிகர்களையும் மகிழ்விக்கும் திறமை கொண்டவர்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” முதல், சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – டாப் கமெண்ட்கள்!

அதுமட்டுமல்லாமல் புதிதாக வரும் நகைச்சுவையாளர்களின் திறமையை கவனித்து அவர்களையும் உயர்த்தி விடும் எண்ணம் கொண்டவர். இவர், எதிர்பாராத விதமாக கடந்த வருடம் செப்டம்பர் 10ம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணமடைந்தார். இவரது திடீர் மறைவினால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், நேற்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனால் சிரிச்சா போச்சு குழுவின் இயக்குனர் தாம்ஸன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், “We miss you till our last breath Balaji” என்று கேப்ஷன் வைத்துள்ளார். மேலும், பல பிரபலங்களும் நேரில் அவரது கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!