செப்டம்பர் முதல் 12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி – நிபுணர் குழு தகவல்!

0
செப்டம்பர் முதல் 12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி - நிபுணர் குழு தகவல்!
செப்டம்பர் முதல் 12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி - நிபுணர் குழு தகவல்!
செப்டம்பர் முதல் 12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி – நிபுணர் குழு தகவல்!

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 12 முதல் 18 வயதுடையவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் ஸைடஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என தடுப்பூசி நிபுணர் குழு தலைவர் தகவல் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் கொரோனா அவசர கால பயன்பாட்டில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடப்படுகிறது. இதற்கிடையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் 12 லிருந்து 18 வயதுட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என தடுப்பூசி நிபுணர் குழு தலைவர் என்.கே.அரோரா உறுதி தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை – அறிவிப்பு!

இது குறித்து செய்தி ஊடகத்தில் பேசிய அவர், ‘கொரோனா வைரசுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவதற்காக 3 ஆம் கட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. கணிப்பின் படி, செப்டம்பர் மாத இறுதியில் இருந்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்க வேண்டும். இல்லையென்றால் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த 2022 ஆம் ஆண்டு துவக்கத்தில் 2 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படலாம்.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில் ஸைடஸ் கேடில்லா என்ற தடுப்பூசிக்கான அனுமதி இன்னும் சில வாரங்களில் கிடைக்க கூடும் என்பதால், செப்டம்பர் மாத இறுதிக்குள் இவை பயன்பாட்டுக்கு வரும். கொரோனா காரணமாக பள்ளிகளை திறப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும்’ என கூறியுள்ளார். குறிப்பாக கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், 3 ஆம் அலைக்கான பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படும் என்பதால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here