இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நவ.30க்குள் இலக்கு நிர்ணயம்!

0
இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு - நவ.30க்குள் இலக்கு நிர்ணயம்!
இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு - நவ.30க்குள் இலக்கு நிர்ணயம்!
இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நவ.30க்குள் இலக்கு நிர்ணயம்!

நவம்பர் இறுதிக்குள் குறைந்தபட்சம் 90% முதல் டோஸ் கோவிட் தடுப்பூசி இலக்கை அனைத்து மாநிலங்களும் அடைய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

முதல் டோஸ் தடுப்பூசி:

கொரோனா தொற்று நோயின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி ஒன்று தான் சிறந்த வழி என்று மத்திய அரசு மக்களுக்கு முன்னதாக வலியுறுத்தியுள்ளது. இதனால் மக்கள் அதிக ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். முதலில் குறிப்பிட்ட அளவு தொகை தடுப்பூசிக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்று கருதிய மத்திய அரசு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்ற திட்டத்தை அறிவித்தது.

TNPSC குரூப் 4 VAO போட்டித்தேர்வு – பாடத்திட்டம், தேர்வு முறைகள் குறித்த விவரங்கள்!

இந்நிலையில், இதுவரை தடுப்பூசி போடாதவர்களையோ அல்லது இரண்டாவது தடுப்பூசியை எடுக்க உள்ளவர்களையோ அடையாளம் காண மாநிலங்கள் தங்கள் சுகாதாரப் பணியாளர்களை வீட்டுக்கு வீடு அனுப்பி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை நவம்பர் 3 முதல் 30 வரை நடைபெறும் சிறப்பு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டதை தொடங்கி வைத்தார். மத்திய அரசின் அறிக்கையின் படி, இந்தியாவின் தகுதியான மக்களில் குறைந்தபட்சம் 78% பேருக்கு கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும், 38% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நவ.29 கடைசி நாள்!

இந்நிலையில், நவம்பர் 30ம் தேதிக்குள் குறைந்தபட்சம் 90% முதல் டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மாதம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை மெய்நிகர் முறையில் நடத்தியது. அதன்படி, நாட்டில் தற்போது 45 மாவட்டங்கள் தடுப்பூசி செலுத்துவதில் மிகவும் பின்னால் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here