தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி – தடுப்பூசி கட்டாயம், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

0
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி - தடுப்பூசி கட்டாயம், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி - தடுப்பூசி கட்டாயம், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி – தடுப்பூசி கட்டாயம், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் 150 பார்வையாளர்கள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று அரசு அனுமதி கொடுத்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி 14ம் தேதியன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், ஜனவரி 15ம் தேதியன்று பாலமேடு, 16ம் தேதியன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட இருந்தது. அதன் படி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் மாடுகளுக்கு உடல்தகுதி சான்றுகளும் வழங்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் சனி, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு – முதல்வர் தீவிர ஆலோசனை!

அந்த வகையில் போட்டிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைப்பரவல் தொற்று வேகமெடுக்க துவங்கியது. இதனால் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமா என்று பல்வேறு குழப்பமான சூழல் நிலவியது. இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருக்கும் அரசு 300 வீரர்கள், 150 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள உத்தரவிட்டுள்ளது. இப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

 • அந்த வகையில், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, மாடுபிடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 300 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
 • எருது விடும் நிகழ்வில் 150 பேர் வரை கலந்து கொள்ளலாம்.
 • ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களுக்கு முன்னதாகவே அதற்கான அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
 • நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வீரர்கள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் அளவு தடுப்பூசியையும் எடுத்திருக்க வேண்டும்.
 • மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் 2 நாட்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் டிக்கெட்!

 • ஜல்லிக்கட்டு போட்டியில் 50% இருக்கைகள் மற்றும் 150 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
 • காளைகளை வைத்திருக்கும் உரிமையாளர், அவருடன் ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
 • இவர்களுக்கும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
 • அடையாள அட்டை இல்லாதவர்கள் போட்டி நடைபெறும் இடத்திற்குள் வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.
 • வெளி ஊர்களில் இருந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க விரும்பும் போட்டியாளர்கள் இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  Velaivaippu Seithigal 2022

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here