ஜனவரி 31 முதல் முழு ஊரடங்கு ரத்து – கொரோனா தடுப்பூசி கட்டாயம்! பிரதமர் அறிவிப்பு!

0
ஜனவரி 31 முதல் முழு ஊரடங்கு ரத்து - கொரோனா தடுப்பூசி கட்டாயம்! பிரதமர் அறிவிப்பு!
ஜனவரி 31 முதல் முழு ஊரடங்கு ரத்து - கொரோனா தடுப்பூசி கட்டாயம்! பிரதமர் அறிவிப்பு!
ஜனவரி 31 முதல் முழு ஊரடங்கு ரத்து – கொரோனா தடுப்பூசி கட்டாயம்! பிரதமர் அறிவிப்பு!

மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் முழு ஊரடங்கு மட்டும் கட்டுபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு:

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற கொடிய வகை வைரஸ் தொற்று தீவுரமெடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கட்டுக்கடங்காமல் பரவிய வைரஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனை தடுக்க சீன அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவை தொடர்ந்து இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பாதிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. இதனால் அனைத்து நாடுகளும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஊரடங்கை அறிவித்தனர்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு!

இந்த கொரோனா வைரஸ் தொற்று அடுத்தடுத்த நிலைகளுக்கு உருமாற்றம் அடைந்து வருகிறது, அதன் தொடர்ச்சியாக தற்போது கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவிலிலும் கொரோனா தொற்று வேகமெடுத்தது. அதனால் அந்நாட்டில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பு – அமைச்சரவை முடிவு!

இந்த கட்டுப்பாடுகளால் ஆஸ்திரியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து அந்நாட்டு அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இனி தேவை இல்லை என்று அதிபர் கார்ல் நெஹாம்மர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள், செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்கள் என அனைவருக்கும் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here